- Advertisement -
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நவம்பர் 23ம் தேதி அன்று நியூயார்க்கில் நடைபெற உள்ள 54வது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் பிரசன்டர் ஆக கலந்துக்கொள்ள இருக்கிறார். இந்த விருதை வழங்கப்போகும் முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்மி விருது தொலைக்காட்சி மற்றும் வெப் சீரிஸ் உலகிற்கான ஆஸ்கார் விருது போல கௌரவமாக கருதப்படுகிறது. இதை முதல் முறையாக வழங்கும் இந்திய நடிகர் என்ற வரலாற்றுச் சிறப்பை விஜய் சேதுபதி பெற இருக்கிறார்.





