- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களோட வரிப்பணத்துல எல்லாத்தையும் செஞ்சுட்டு அதை ஓசி ஓசின்னு சொல்லி கேவலப்படுத்துவீங்களா? - ஈரோடு...

மக்களோட வரிப்பணத்துல எல்லாத்தையும் செஞ்சுட்டு அதை ஓசி ஓசின்னு சொல்லி கேவலப்படுத்துவீங்களா? – ஈரோடு தவெக கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

ஈரோட்டில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் இன்று மதியம் தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்கும் உள்ள உறவு இன்று நேற்று வந்தது அல்ல. 33 ஆண்டுகளாக அது இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் 10 வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டேன். அன்று முதல் மக்களுடன் என்னுடைய உறவு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எம்ஜிஆரும் பெரியாரும் யாருடைய சொத்தும் அல்ல. அவர்களது பெயர்களை பயன்படுத்த தடை சொல்லக் கூடாது. அவர்களை சொந்தம் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு அவரது கொள்கைகளை பேசிக்கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டம் இனியாவது திருந்த வேண்டும். இனியும் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். ஊழல் செய்யாதீர்கள்.

- Advertisement -

தவெக எங்களுக்கு பொருட்டே இல்லை என்று கூறுபவர்கள் தவெக குறித்து பயம் இல்லை என்றால் ஏன் இப்படி செல்லும் இடங்களில் எல்லாம், எங்களுக்கு பயம் இல்லே, பயம் இல்லே என்று ஏன் கதறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. முதலில் மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள்.

திமுக போல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாயில் வடை சுடும் வேலை எல்லாம் எங்களுக்கு தெரியாது. மக்களுக்கான நல்ல திட்டங்களை சொல்கிறோம். அதை நிறைவேற்றித் தருவதுதான் தவெகவின் கொள்கை. காஞ்சிபுரத்தில் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் தப்பு தப்பாக திமுகவினர் திரித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

நான் எப்போதுமே சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்கள் வரிப்பணத்தில் அரசு திட்டத்தில் இலவசங்களை செய்துவிட்டு ஓசி ஓசி என்று சொல்லி மக்களை கேவலப்படுத்துகிறீர்கள். மக்களை ஓசி ஓசி என்று சொல்லி அவமானப்படுத்துகிறீர்கள். இதை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.

அண்ணன் செங்கோட்டையன் தவெக கட்சிக்கு வந்தது நமக்கும் நம் கட்சிக்கும் மிகப்பெரிய பலம். அவரை போலவே இன்னும் நிறைய பேர் நமது கட்சிக்கு விரைவில் வரப் போகிறார்கள். அப்படி வருகிற அனைவருக்குமே நாம் சரியான அங்கீகாரம் அவர்களுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஜய் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்