- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல பாலிவுட் நடிகருக்கு ரூ. 72 கோடி சொத்தை தந்துவிட்டு இறந்து போன தீவிர ரசிகை...

பிரபல பாலிவுட் நடிகருக்கு ரூ. 72 கோடி சொத்தை தந்துவிட்டு இறந்து போன தீவிர ரசிகை – பதிலுக்கு நடிகர் செய்த தரமான சம்பவம்… வேற லெவலுங்க!

- Advertisement -

மனிதர்களின் மனங்கள் மிகவும் விசித்திரமானவை. அன்பு காட்ட துவங்கி விட்டால் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது கூட அளவுகடந்த அன்பை கொட்டி விடுவார்கள். வெளிநாடுகளில் தங்களது கோடிக்கணக்கான சொத்துகளை செல்லப்பிராணிகள் மீது எழுதி வைத்துவிட்டு இறந்துபோன விசித்திரமான மனிதர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.

இன்னும் பலர் தங்களது சொத்துகளுக்கு குடும்ப வாரிசுகள் இல்லாத பட்சத்தில் ஆதரவற்ற இல்லங்களுக்கு, மருத்துவ அறக்கட்டளைகளுக்கு ஆசிரமங்களுக்கு ஆன்மிக சேவை அமைப்புகளுக்கு தங்களது சொத்துகளை உயிலாக எழுதி வைத்து விடுகின்றனர். ஏனென்றால் தங்களது மறைவுக்கு பிறகு அந்த சொத்து மக்களுக்கு பயன்படட்டும் என்கிற மனித நேயம்தான்.

- Advertisement -

அதே போல் உலகம் முழுவதும் சினிமா நடிகர்கள் நடிகைகள் மீது ரசிகர்களுக்கு அளவுகடந்த அன்பும் ஆதரவும் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்ப்பதோடு அவர்களது ரசிப்பு தன்மை நின்று விடுவதில்லை. நடிகரை நேரில் சந்திப்பது, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமின்றி குடும்ப உறவினராக சிலர் மாறுவதும் உண்டு.

ஆனால் முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு ரசிகை, பிரபல பாலிவுட் நடிகருக்கு ரூ. 72 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை அவருக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார் என்ற தகவல் இந்திய சினிமா வட்டாரத்தில், ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகர் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமான நடிகர் சஞ்சய் தத் தான்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக வில்லனாக நடித்தவர்தான் சஞ்சய் தத். இவர் மீது அளவு கடந்த ஆசை கொண்டு இவரையே திருமணம் செய்துக்கொண்டு வாழ ஆசைப்பட்டவர் நிஷா படேல் என்ற பெண் ரசிகை ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கிறார்.

அவர் இறந்த பிறகு அவரது ரூ. 72 கோடி சொத்துகளை நடிகர் சஞ்சய் தத்துக்கு அவர் எழுதி வைத்திருப்பது போலீசார் மூலமாக நடிகர் சஞ்சய் தத்துக்கு தெரிய வந்துள்ளது. மும்பை போலீசார் போன் மூலம் இந்த தகவலை அவருக்கு தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு ரசிகை எனக்கு இருப்பதே தெரியாது என அதிர்ச்சியடைந்த சஞ்சய் தத், தனக்கு அந்த ரசிகை எழுதி வைத்த சொத்துகளை ஏற்க மறுத்துவிட்டார். எனக்கும் அந்த ரசிகைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லாத நிலையில் அவரது சொத்து எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்