- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை தான் சினிமாவிலேயே செய்றாங்களே, தனியா வேற செய்யணுமா? - ரஜினி, கமல் குறித்து பில்டப்பு...

அதை தான் சினிமாவிலேயே செய்றாங்களே, தனியா வேற செய்யணுமா? – ரஜினி, கமல் குறித்து பில்டப்பு செய்து பேசிய பிரபல நடிகரை கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது 40 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் பல நடிகர்கள், 90 கிட்ஸ்களாக தான் இருப்பர். அப்படி என்றால் நிச்சயமாக அவர்கள் ரஜினி, கமல் ரசிகர்களாக தான் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக நடிகர்கள் விஜய், அஜீத்குமார் கூட ஆரம்பத்தில் சில படங்களில் தங்களை ரஜினி, கமல் ரசிகர்களாக காட்டிக்கொண்டு இருப்பார்கள்.

அதே போல் இன்றைய நடிகர்களில் ஜெயம் ரவி, சிலம்பரசன், சித்தார்த், தனுஷ் போன்ற பலரும், தங்களது அபிமான நடிகர் ரஜினி, அல்லது நடிகர் கமல் அல்து இருவருக்குமே நான் ரசிகர்தான் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் 1980, 90களில் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக ரஜினியும், கமலும் வலம் வந்துக்கொண்டிருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் சித்தார்த். அவர் நடித்த சித்தா படத்தை கூட, வீடியோ கான்ஸ்பரன்சிங் மூலம் கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்து, ஷங்கர் டைரக்‌ஷனில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த்.

அதனால் மணிரத்னம், கமல்ஹாசன் இருவரையுமே தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவராக இருக்கிறார். இதை அவரே பல மேடைகளில் வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிக்க வாய்ப்பை மறுத்திருந்தார் நடிகர் சித்தார்த். இதற்கும் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சித்தார்த், நான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரண்டு ஜாம்பவான்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த அந்த முடிவை பார்த்து வியந்து போயிருக்கிறேன். அதாவது மதுபானம் குடிப்பது, புகை பிடிப்பது, பான் மசாலா விளம்பரங்கள் போன்றவற்றில் நடிக்காமல் இருந்துள்ளனர். இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்து, எங்களை போன்ற இளம் நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருந்துள்ளனர், என்று குறிப்பிட்டு பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில், எப்போதும் மதுபாட்டிலும், கையுமாக தான் பெரும் ‘குடி’மகனாக கமல் நடித்திருந்தார். ரஜினி சிகரட் புகைத்தபடி நடித்த படங்கள் ஏராளம். சில அரசியல் கட்சிகளின் கடும் விமர்சனங்களால், பாபா படத்துக்கு பிறகு அவர் படங்களில் அவர் புகைக்கும் காட்சிகள் இல்லை. மற்றபடி புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற படக்காட்சிகளில் கமல், ரஜினி ஏராளமாக நடித்து, தமிழக இளைஞர்களுக்கு ஏற்கனவே நிறைய நல்வழி காட்டி விட்டனர். இனி விளம்பரத்தில் வேற தனியா நடிக்கணுமா, என்று ரசிகர்கள் சித்தார்த்தை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்