- Advertisement -
Homeபொழுதுபோக்குபண்ணையாளர்களை அரசியலை விட்டு வெளியேற்றுவதே என்னுடைய வேலை - தவெக கட்சி 2ம் ஆண்டு துவக்க...

பண்ணையாளர்களை அரசியலை விட்டு வெளியேற்றுவதே என்னுடைய வேலை – தவெக கட்சி 2ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு பிப்ரவரி 2ம் தேதி துவங்கினார். கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, அரசியல் என்றாலே வேற லெவல் தான் இல்லையா. அரசியலில் யார் யாரை எதிர்ப்பார்கள் யார் யார் ஆதரிப்பார்கள் என்பதை கணிக்கவே முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. யார் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்வார்கள்.

ஆனால் மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் ஒரு சிலருக்கு எரிச்சல் வருகிறது. இப்படிப்பட்ட அரசியல் களத்தில் பயம் இல்லாமல் பதற்றம் இல்லாமல் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

ஒரு அரசியல் கட்சிக்கு மிகப்பெரிய பலமே அதன் கட்டமைப்புதான். மரத்தின் ஆணிவேர் போல அது உறுதியாக வலிமையாக இருக்க வேண்டும். அதனால் தவெக கட்சியை பலப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளோம். இந்த நேரத்தில் நமது மீது புகார் எழுந்துள்ளது. அதாவது தவெக மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞராக இருக்கிறார்களாம்.

நிர்வாகிகள் இளைஞர்களாக இருப்பதில் என்ன தவறு? பேரறிஞர் அண்ணாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் பின்னால் இருந்தது வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்கள் தான் 1967ம் ஆண்டு மற்றும் 1977ம் ஆண்டு தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு. தவெக கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான். சாதாரண குடும்பத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் அரசியலுக்கு வரக்கூடாதா. சாதாரண எளிய மனிதர்களின் கட்சிதான் இது.

இந்த கட்சி பண்ணையாளர்களுக்கான கட்சி கிடையாது. பண்ணையாளர்கள் தான் கடந்த காலங்களில் அரசியலில், பதவியில் இருப்பார்கள் ஆனால் இப்போது அதுவே உல்டாவாக மாறி இருக்கிறது. தற்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாளர்களாக மாறிவிடுகிறார்கள். மக்கள் நலனை பற்றியோ நாட்டு நலனை பற்றியோ வளர்ச்சியை பற்றியோ கவலையில்லாமல் பணம் பணம் என்று திரியும் பண்ணையார்களை அரசியல் விட்டு அகற்றுவதே நமது வேலை. ஜனநாயக முறைப்படி அதை செய்வதற்கு தான் 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறோம், என்று அவ்விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

சற்று முன்