- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் 7 போட்டியாளர் - இருதய அறுவை சிகிச்சை நடந்ததாக பரபரப்பு

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் 7 போட்டியாளர் – இருதய அறுவை சிகிச்சை நடந்ததாக பரபரப்பு

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. முதலில் 18 போட்டியாளர்கள், அதன்பின் வைல்டு கார்டு முறையில் 5 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை இன்னும் சில தினங்களில் எட்ட உள்ளதால், சொற்ப எண்ணிக்கையிலான போட்டியாளர்களே வீட்டுக்குள் இருக்கின்றனர்.

இந்தமுறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் விசித்ரா தான் என உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார். அவர் மீதான விமர்சனங்கள், கருத்துகள் நல்ல விதமாக இருந்த நிலையில், அவர்தான் டைட்டில் வின்னர் என நம்பிய நிலையில், வெளியேற்றப்பட்டது, பிக்பாஸ் பார்வையாளர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

- Advertisement -

இப்போதைய சூழலில் சீரியல் நடிகை அர்ச்சனா அல்லது மாயா பிக்பாஸ் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுவும் மாயா குறித்து ஏற்கனவே கடுமையான விமர்சனங்களும், மாயாவின் ஆதரவாளராக கமல் இருக்கிறார் போன்ற குற்றசசாட்டுகள் உள்ளதால், அவருக்கு டைட்டில் வின்னர் கொடுக்க விஜய் டிவி யோசிக்கலாம்.

அதே வேளையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வசனத்தை கமல் அடிக்கடி சொல்வதால், டைட்டில் வின்னர் ஆக வேண்டிய விசித்ராவை வெளியே அனுப்பியது போல, வேண்டும் என்றே மாயாவை டைட்டில் வின்னராக அறிவிக்கலாம். கடந்தமுறை 6வது சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன் என எதிர்பார்த்த நிலையில், அசீமை அறிவித்தது போல, கடைசி நேர டிவிஸ்ட் நடக்கலாம்.

- Advertisement -

இதற்கிடையே இந்தமுறை 7வது சீசன் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக சென்ற பவா செல்லத்துரை அவராகவே, வீட்டில் இருந்து வெளியேறினார். தனக்கு இதய பிரச்சனை உள்ளதாகவும், இந்த வீட்டுக்குள் இருக்க முடியவில்லை எனவும் அவரே பிக்பாஸிடம் கோரிக்கை தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது அவருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் சிறந்த கதை சொல்லியாக, இலக்கிய ஆர்வலராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர். இவருக்கு இலக்கிய உலகில் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதனால் பவா செல்லத்துறை விரைவில் குணமடைய வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்