- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை பற்றிப் பேச நடிகர் ராமராஜனுக்கு தான் முழு தகுதி இருக்கிறது, நடிகர் விஜய்...

அந்த விஷயத்தை பற்றிப் பேச நடிகர் ராமராஜனுக்கு தான் முழு தகுதி இருக்கிறது, நடிகர் விஜய் பேசலாமா? – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

- Advertisement -

நடிகர் விஜய் இன்று சென்னையில் நடந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும், கல்வி விருதும் வழங்கினார்.

ஆனால் கடந்த ஆண்டில், தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பெற்றோருடன் பங்கேற்ற நிலையில், ஒரே நாளில் இந்த விழா நடத்தப்பட்டது. 10 மணி நேரத்துக்கு மேல் விழா நீடித்த நிலையில், விஜய் மிகவும் சோர்வடைந்தார். மேடையில் அதிக நேரம் நிற்க முடியாமல் சிரமப்பட்டார்.

- Advertisement -

அதனால் இந்த முறை, இந்த விழாவை 2 கட்டங்களாக நடத்த, தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்தது. அதன்படி இன்றும், வருகிற ஜூலை 3ம் தேதியும் 2 கட்டங்களாக விழா நடத்தப்படுகிறது. இன்று நடந்த இந்த விழாவில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.

இந்த விழாவின் துவக்கத்தில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை கூறியது, பொதுமக்கள் மத்தியில், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழகுங்கள். அவர்களிடம் தவறான பழக்கங்கள் இருந்தால் அதைவிட்டு அவர்கள் விலக முயற்சி செய்யுங்கள். நீங்களும் அந்த தவறான பழக்கங்களில் ஈடுபட்டு விடாதீர்கள்.

- Advertisement -

தமிழ்நாட்டில் இளம் வயதினர் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. அதுபோன்ற தவறான கெட்ட பழக்கங்கள் வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் பேசியது, பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில், சினிமாவில் புகை பிடிப்பது போல, மதுபானம் அருந்துவது போல பல படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய், இப்படி அட்வைஸ் செய்வது சரிதானா என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மதுபானம் குடிப்பது போல், சிகரட் பிடிப்பது போல் நடிக்காதவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரது தீவிர ரசிகரான நடிகர் ராமராஜனும் ஒரு படத்தில் கூட அதுபோன்ற காட்சியில் நடித்தது இல்லை. அப்படி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றால், அந்த படத்திலேயே நான் நடிக்க மாட்டேன் என்று பலமுறை மறுத்துவர் நடிகர் ராமராஜன். அதனால், இப்படிப்பட்ட அட்வைஸ் சொல்ல ஒரே தகுதியான நடிகர் ராமராஜன்தான் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்