நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிற ஒரு நட்சத்திர நடிகராக உள்ளார். சீனியர் நடிகர்கள் கமல் ரஜினிகாந்தை விட அதிக சம்பளமும் அதிக ரசிகர்களும் கொண்டவராக விஜய் இருக்கிறார். ஆனால் சினிமாவுக்கு விரைவில் குட்பை சொல்லும் விஜய் அரசியல் தலைவராக களத்தில் முழுவீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். அதே போல் நடிகர் கமல்ஹாசனும் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக அவர் தோல்விகளை சந்தித்து வருகிறார். சமீபமாக திமுகவின் ஆதரவாளராகவும் மாறியிருக்கிறார்.
ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் கூறியதாவது, நீங்க நினைக்கற மாதிரி நாங்க ஷூட்டிங் போயிட்டு ஜூஸ் குடிச்சிக்கிட்டு நல்லா ஒடம்ப பார்த்துக்கிட்டு சொல்ற டயலாக்கை மட்டும் நடிச்சிட்டு வரலே. எங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு தகுந்த மாதிரி என்ன இன்வால்வ் ஆகி பண்ண முடியுமோ நாங்க எல்லாத்துலேயும் இன்வால்வ் ஆகி பண்ணிட்டுதான் இருக்கோம்.
கமல் சார் எல்லாம் ஒரு ஜீனியஸ். அவர் கட்டி முடிக்கப்பட்ட ஒரு கோபுரம். நாங்க எல்லாம் நான் எல்லாம் அப்படி இல்லை. நானெல்லாம் அதில் ஒரு செங்கல் மாதிரிதான். நீங்க கமல் சாரையே பார்த்திட்டிங்கன்னா 100 படத்துக்கு அப்புறம்தான் தன்னை வித்யாசமா காட்டி அவர் கேரக்டர் பண்ணினார்.
அது ராஜபார்வைன்னு நெனைக்கிறேன். அவரோட 100வது படம். அவரது ஆரம்பகால படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதைகள் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ்தான் பண்ணியிருப்பார். அவர் 150 படங்கள் இதுவரை பண்ணியிருப்பார். நான் வந்தே 5 ஆண்டுகள்தான் ஆகிறது. அவர் அதுக்கு அப்புறம்தான் அதிக இன்வால்வ் ஆகி புதுவிதமான கேரக்டர்ஸ் எல்லாம் செஞ்சார்.
எனக்கு அப்படி ஒரு வயது வந்த பிறகு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்த பிறகு அப்படிப்பட்ட வித்யாசமான கேரக்டர்ஸ் எல்லாம் நான் ட்ரை பண்ணலாம் என்று நினைக்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இப்படி தனது கேரக்டர்ஸ் குறித்தும் சீனியர் கமல்ஹாசன் குறித்தும் நடிகர் விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





