- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை - இந்தியில் நடிகர் தனுஷூடன் நடிக்கும் நடிகை கீர்த்தி...

இப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை – இந்தியில் நடிகர் தனுஷூடன் நடிக்கும் நடிகை கீர்த்தி சனோன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். பல படங்களில் சொந்தக் குரலில் பாடி இருக்கிறார். வுண்டர்பார் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களை தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார். வருகிற ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தனுஷூடன் ராஜ்கிரண் சத்யராஜ் அருண் விஜய் நித்யாமேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

தெலுங்கு பட முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இயக்கத்தில் உருவான ப பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் இயக்கிய 2வது படம் ராயன் மாபெரும் வெற்றிப் படமாக கடந்தாண்டில் அமைந்தது. ரூ. 100 கோடிக்கு மேல் ராயன் படம் வசூலை குவித்தது. ஆனால் தனுஷ் இயக்கத்தில் வெளியான 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் தோல்வியை சந்தித்தது. எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

- Advertisement -

இப்போது நடிகர் தனுஷ் இந்தியில் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹாலிவுட் படத்திலும் நடிக்கும் தனுஷ், பாலிவுட்டிலும் தனது காலடியை பதிக்க துவங்கியிருக்கிறார். தேரே இஷ்க் மெயின் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனோன் கூறுகையில், நான் நடிகர் தனுஷூடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போது டெல்லியில் நடந்து வருகிறது. நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கிறேன். தனுஷூக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக தனுஷூடன் சேர்ந்து நடிப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த படமும் அதே போல் அற்புதமாக ரசிகர்களுக்கு இருக்கும், என்று கீர்த்தி சனோன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்