- Advertisement -
Homeபொழுதுபோக்கு2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பரபரப்பான...

2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பரபரப்பான பேச்சு – அரசியலுக்கு வந்தவுடனே மனுஷன் இந்தப் போடு போடுகிறாரே?

- Advertisement -

சென்னை, திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருதுகள் வழங்கும் விழா, இன்று காலையில் துவங்கியது. இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது, நான் இன்று எதுவும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் முக்கியமான அந்த விஷயத்தை பற்றி இன்று நான் பேசாவிட்டால் அது கரெக்டாக இருக்காது என்று தோன்றியது. அது என்னவென்று நீங்களே யூகித்திருப்பீர்கள். நீட் பற்றிதான் நான் பேசுகிறேன்.

இந்த நீட் தேர்வால், தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ரொம்பவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் ஒரு சத்தியமான உண்மை.

- Advertisement -

இந்த நீட் பற்றி நான் மூன்று விஷயங்களை பிரச்னையாக பார்க்கிறேன். முதலில் ஒன்றாவதாக மாநில உரிமைகளுக்கு எதிரானதாக நீட் இருக்கிறது. 1975ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்த கல்வி மாநில பட்டியலில் இருந்தது. இது உங்களுக்கே தெரியும். ஒன்றிய அரசு வந்த பிறகு அதை பொதுப்பட்டியலில் சேர்த்தனர். இதுதான் முதல் பிரச்னையாக ஆரம்பமானது.

இரண்டாவதாக ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம் இது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான ஒரு விஷயமாக இருக்கிறது என்பதாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி அந்த பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்கிறது. பன்முகத் தன்மை என்பது பலமே தவிர பலவீனம் கிடையாது.

- Advertisement -

இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், மாநில மொழியில், ஸ்டேட் சிலபஸ்சில் படித்துவிட்டு என்சிஇஆர்டி சிலபஸ்சில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாக இருக்கும்? அதுவும் கிராமப்புறத்தில் இருக்கிற மாணவ, மாணவியர் அதுவும் மருத்துவ படிப்புக்கு இது, எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

இதில் மூன்றாவது பிரச்னையாக கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில் நிறைய குளறுபடிகள் நடந்ததாக நிறைய செய்திகள் வெளியானது. இதற்கு பிறகு நீட் தேர்வு மீது மக்களுக்கு இருந்த நம்பகத் தன்மையே போய்விட்டது. இனிமேல் நாடு முழுவதுமே இந்த நீட் தேர்வு தேவையில்லை என்பதே நாம் எல்லோரும் புரிந்துக்கொண்ட ஒரு விஷயம். இதற்கு தீர்வு நீட் விலக்குதான் இதற்கு தீர்வு என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் நடிகர் விஜய். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்