தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் வருகைக்கு பின் மற்ற அரசியல் கட்சிகளின் மத்தியில் அனல் பறக்கிறது. குறிப்பாக விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட முதல் தவெக மாநாடு, தற்போது மதுரையில் நடத்தப்பட்ட தவெக 2வது மாநாடு என மாநாடுகளில் திரண்ட லட்சக்கணக்ககான மக்கள் கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சிகள் அரண்டு போயிருக்கின்றன.
ஆளும்கட்சியான திமுக பலமுறை தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறது. ஒருமுறை கூட இப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தை திமுக தனது சொந்த மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் கண்டதில்லை. அதே போல் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவுக்கும் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் வந்ததும் இல்லை.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் வருகிற 13ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20ம் தேதி வரை 4 மாதங்களுக்கு மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற 13ம் தேதி சனிக்கிழமை தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை துவங்கும் நடிகர் விஜய் திருச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் 13ம் தேதி மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து செப்டம்பர் 20ம் தேதி நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி திருவள்ளூர் வடசென்னை பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். தொடர்ந்து அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய 2 நாட்களில் கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய பகுதிகளில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து அக்டோபர் 11ம் தேதி கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி, 18ம் தேதி காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை 25ம் தேதி தென்சென்னை செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர், நவம்பர் 8ம் தேதி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம், நவம்பர் 15ம் தேதி தென்காசி விருதுநகர் 22ம் தேதி கடலூர் 29ம் தேதி சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி தஞ்சாவூர் புதுக்கோட்டை 13ம் தேதி சேலம் நாமக்கல் கரூர் 20ம் தேதி திண்டுக்கல் தேனி மதுரை என நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறார். வரும் 13ம் தேதி துவங்கிய டிசம்பர் 20ம் தேதி வரை வாரத்தில் சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்கிறார். சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் மக்கள் சந்திப்பு என்ற விஜயின் டிவிஸ்ட் மக்களுக்கும் தவெக கட்சியினருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.





