தமிழ் சினிமாவில் நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி போல ரஜினி கமல் போல இன்றைய காலகட்டத்தில் கடும் போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் அஜீத்குமார் விஜய்தான். கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களை போட்டியாளர்களாக உருவாக்கி ரசிகர்கள் கடுமையான சண்டையிட்டு வருகின்றனர்.
ஆனால் இப்போது நடிகர் விஜய் நடிப்பு துறையில் இருந்து விலகும் நிலையில் உள்ளார். இப்போது அவர் நடித்துவரும் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லும் விஜய், அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த போது, கட்சி கொடியை அறிமுகம் செய்த போது, விக்கிரவாண்டியில் அரசியல் மாநாட்டை நடத்திய போது, திரையுலகம் சார்ந்த சிலர் வாழ்த்துகள் கூறினர். அதுவும் சொற்ப எண்ணிக்கைதான். பெரிய அளவில் தமிழ் சினிமா துறை கலைஞர்கள் சார்பில் விஜய்க்கு ஆதரவு காட்டவில்லை.
ஆனால் அதே நேரத்தில் அஜீத்குமார் மற்றும் அவரது ரசிகர்கள் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்க்கு வாழ்த்து சொன்னால் தனக்கு அரசியல் சாயம் பூசி விடுவார்கள் என்பதால் அஜீத்குமார் விஜய்க்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்த்தார். அது நியாயமான காரணமாகவும் இருந்தது.
ஆனால் அஜீத்குமார் சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து சொன்ன நிலையில் விஜய் வாழ்த்து சொல்லாமல் தவிர்த்து விட்டார். அதே நேரத்தில் இப்போது மத்திய அரசு அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்த நிலையிலும் விஜய் அஜீத்குமாருக்கு வாழ்த்து சொல்லவில்லை.
மத்திய அரசு தரப்பில் விஜய்க்கு இதுவரை எந்த விருதும் கிடைக்கவில்லை. அதனால் அஜீத்குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டதால் விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தவிர திமுக அரசுக்கு அஜீத்குமார் நன்றி சொன்னதும் விஜய்க்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் தனக்கு பெரிய விருது கிடைக்காததும் விஜய்க்கு ஏமாற்றத்தை தந்ததால், அஜீத்குமாருக்கு வாழ்த்து சொல்லவில்லை. சக மனிதராக, கட்சி தலைவராக ஒரு நண்பராக விஜய், அஜீத்குமாருக்கு வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். அந்த மனசு விஜய்க்கு இல்லை என்று ஏகே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.





