- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னோட வளர்ச்சிக்கு உதவிய நன்றியை இப்படி மறந்து விட்டாரே? - விஜயகாந்த் ரசிகர்களின் மனதை...

தன்னோட வளர்ச்சிக்கு உதவிய நன்றியை இப்படி மறந்து விட்டாரே? – விஜயகாந்த் ரசிகர்களின் மனதை நோகடித்த நடிகர்

- Advertisement -

கடந்த 1980, 90ம் ஆண்டுகளில் நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக அசத்தியவர். அன்றைய காலகட்டத்தில் விஜயகாந்த் படங்கள் என்றாலே, பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. துவக்கத்தில்‘புரட்சிக்கலைஞர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்த பிறகு ‘கேப்டன்’ என்பதே அவரது பெயராக மாறி விட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ரஜினி, கமல் போன்ற முக்கிய நட்சத்திரங்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி, நடிகர் சங்கத்துக்காக நிதி திரட்டினார். சினிமாவில் நடிக்கும் போதே, ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் விஜயகாந்த்.

நாளடைவில் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட விஜயகாந்த், அரசியல் ஆர்வம் காரணமாக, தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியைத் துவங்கி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வில் இருக்கிறார். கட்சியின் முக்கிய செயல்பாடுகளை அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கவனித்துக்கொள்கின்றனர்.

நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில், அவரது படங்கள் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அவர் அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ படமும் வெற்றி பெறவில்லை. அதனால், அப்போதைய பெரிய ஹீரோக்களில் யாராவது ஒருவருடன் நடித்தால், விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைக்கும் என, விஜயின் தந்தை, டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் கருதி இருக்கிறார்.

ஆனால், முன்னணி ஹீரோக்கள் பலரும், பல படங்களில் ‘கமிட்’ ஆகி பரபரப்பாக நடித்துக் கொண்டு இருந்தனர். அதே போல், விஜயகாந்த்தும் தனது படங்களில் மிகவும் ‘பிஸி’யாக நடித்துக்கொண்டிருந்தார் எனினும், எஸ்ஏ சந்திரசேகர், விஜயகாந்தை சந்திக்க விரும்பியதை அறிந்து, அவரது வீடு தேடி வந்திருக்கிறார். நிலைமையை புரிந்துக்கொண்ட விஜயகாந்த், ‘எத்தனை நாட்கள் தேதி வேண்டும்,’ என்று அவரிடம் கேட்டு, விஜய் உடன் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகே ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜய்காந்த் தின் தம்பியாக விஜய் நடித்தார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்னர் படிப்படியாக வளர்ந்து, அவர் முன்னணி நடிகராக தற்போது இருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்த நிலையில் இருக்கும் விஜயகாந்த்தை நேரில் சென்று நலம் விசாரிக்க, நடிகர் விஜய் ஆர்வம் காட்டவில்லை என, நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு நேர்காணலில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில், தனது சினிமா வளர்ச்சிக்கு விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவியை விஜய் மறந்துவிட்டாரே, என்றும் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்