- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் காட்சிகளில் இந்த நடிகையுடன் எப்படி நடிப்பது? கண்டிப்பாக நடிக்க மாட்டேன் - கேப்டன் விஜயகாந்த்...

காதல் காட்சிகளில் இந்த நடிகையுடன் எப்படி நடிப்பது? கண்டிப்பாக நடிக்க மாட்டேன் – கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரபல நடிகை சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ மனிதர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகராக, சிறந்த மனிதராக அவரது நல்ல குணங்களை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்த போது, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடிகர் சங்க கடனை முற்றிலுமாக அடைத்ததோடு, சங்கத்தின் இருப்பாக 1.70 கோடி வைத்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த அவர், அவரது பதவி காலத்தில் பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் முதல், அறிமுக நடிகர்கள், அறிமுக தயாரிப்பாளர்கள் வரை எல்லோரையும் ஒன்றாக பாவித்து வழிநடத்தினார். பிரச்னை என்று வருபவர்களுக்கு, உரிய முறையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். சங்கத்தை நல்ல முறையில் வழிநடத்தியவர் விஜயகாந்த்.

- Advertisement -

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்களில் மட்டும் நட்சத்திர நடிகர்கள் முதல், லைட்பாய் வரை அங்கு பணிபுரியும் அனைவருக்குமே ஒரே விதமான உணவுதான் வழங்கப்படும். அதுவும் அசைவ விருந்தும் தினமும் பரிமாறப்படும். உணவில் பாகுபாடு என்பதை கேப்டன் ஏற்றுக்கொள்ள மாட்டார். தயாரிப்பாளர் அதிக செலவு என்று கருதினால், தன் சம்பளத்தில் அதற்கான தொகையை கழித்துக்கொள்ள சொல்வது கேப்டனின் வழக்கம்.

அதுமட்டுமின்றி விஜயகாந்த் ஆதரவு தந்து தன் படங்களில் நடிக்க வாய்ப்பளித்து சினிமாவில் அடையாளம் காணப்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள் பல பேர் உள்ளனர். குறிப்பாக பிலிம் சிட்டி கல்லூரியில் படித்த புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர் கேப்டன்தான். 41 பேருக்கு இப்படி தன் படங்களை இயக்க வாய்ப்பளித்தவர்.

- Advertisement -

நடிகர்கள் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், வடிவேலு, பொன்னம்பலம், தியாகு, எஸ்எஸ் சந்திரன் போன்றவர்களுக்கு தன் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பளித்து அவர்கள் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, ஆபாவாணன், ஆர்வி உதயகுமார் போன்றவர்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

இந்நிலையில் நடிகை ஊர்வசி சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு நேர்காணலில் விஜயகாந்த் பற்றி பேசியிருக்கிறார். நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே, விஜயகாந்துக்கு என்னை தெரியும். தங்கச்சி என்றுதான் என்னை அழைப்பார். சில படங்களில் நானும் அவரும் ஜோடியாக நடித்தோம். தங்கச்சி என்று அழைக்கும் பெண்ணுடன் எப்படி ஜோடியாக நடிக்கறது, என்று கேட்பார். காதல் காட்சிகள் வந்தால், அப்படி இப்படி பேசி மழுப்பி, நடிக்க மாட்டேன் என்று மறுத்து விடுவார். ஊர்வசி பயங்கர வெள்ளையாக இருக்கிறார். நான் எப்படி காதல் காட்சிகளில் நடிக்க முடியும் என்றும் கூறி மறுத்து விடுவார் என, ஊர்வசி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்