நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இப்போது ஜனநாயன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் விஜய், இனி படங்களில் நடிப்பதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படம், நடிகர் விஜய் நடித்த 69வது படமாகும். இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தை பொருத்த வரை, அரசியல் கலந்த ஒரு படமாக தான் உருவாகி இருக்கிறது. 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் நடத்தி வரும் தவெக கட்சி போட்டியிடுவதால், இந்த படத்தில் அதுசார்ந்த காட்சிகளும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அரசியல் களத்திலும் கண்டிப்பாக ஜனநாயகன் படம் பெரிய ரீச் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் ஜனநாயகன் படம் குறித்த எந்த அப்டேட் ஆக இருந்தாலும் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதம் முன்பாக வெளியிட்டால் போதும் என்ற முடிவில் நடிகர் விஜய் இருந்தார். அதனால் எந்த அப்டேட்டும் இப்போதைக்கு வேண்டாம் என்றுதான் படக்குழுவிடம் கண்டிசனாக கூறியிருந்தார். ஆனால் நாளை விஜயின் 51வது பிறந்த நாளாகும். இந்த ஸ்பெஷல் நாளில் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.
அதனால் நாளை ஜனநாயகன் படத்தில் இருந்து ஒரு வீடியோ கிளிம்ஸ் மட்டுமே வெளியிட முதலில் திட்டம் இருந்தது. சில விநாடிகள் நறுக்கு தெறித்தது போல, சில காட்சிகளுடன் வீடியோ கிளிம்ஸ் வெளியிட விஜய் அனுமதி தந்திருந்தார். ஆனால் அது பெரிய அளவில் ரசிகர்களை கவராது. ஏமாற்றத்தில் தள்ளிவிடும் என்பதால் இப்போது புதிய அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களை வெறி ஏற்றியுள்ளது.
இன்று இரவு சரியாக 12 மணிக்கு ஜனநாயகன் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது. இது விஜயின் பிறந்த நாளில் ஜனநாயகன் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் ஸ்பெஷல் அப்டேட் ஆகும். இந்த பாடல் காட்சி வீடியோ பெரிய அளவில் இணையத்தில் டிரண்டிங் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில் இணையத்தில் இப்போதே விஜய்க்கு பிறந்த நாள் வீடியோக்களும் ரிலீஸ்களும் குவிந்து வருகின்றன.





