- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கட்சி எதிர்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தல், தேர்தல் வியூகங்கள் சொல்லும் லேட்டஸ்ட் நிலவரம் -...

விஜய் கட்சி எதிர்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தல், தேர்தல் வியூகங்கள் சொல்லும் லேட்டஸ்ட் நிலவரம் – வீடுதோறும் இதை கன்பார்ம் பண்ண அட்வைஸ்!

- Advertisement -

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் இயக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அரசியல் கட்சி தலைவராக விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என திமுக அரசு நெருக்கடி தந்த நிலையில், திரண்ட பல லட்சம் மக்கள் கூட்டம் விஜயின் அரசியல் செல்வாக்கை நிரூபித்தது.

எனினும் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பது சாதாரண விஷயமல்ல என்பதை கட்சி தலைவராக விஜயும் உணர்ந்திருக்கிறார். பணபலம் கூட்டணி கட்சிகள் பலம் திமுக என்ற பாரம்பரியம் ஆகிய பலமான விஷயங்களை அடித்து உடைத்து நொறுக்கி, மக்கள் ஆதரவு என்ற ஒரே பலத்தால் விஜய், தமிழக முதல்வராக மாறுவது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

- Advertisement -

தவெக கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்கு மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை தவெக கட்சிக்கு பலமாக மாற்ற தலைவர் விஜய் அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை நடத்தி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தவெக கட்சிக்கு தாவியுள்ள ஆதவ் அர்ஜூன் தற்போது தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார்.

சமீபத்தில் தேசிய கட்சிகளின் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனும் இருந்துள்ளார். இன்றைய நிலவரப்படி நடிகர் விஜய் கட்சிக்கு 20 சதவீத ஓட்டுகள் உறுதியாகி உள்ளது. வருகிற சட்டசபை தேர்தல் 20 சதவீத ஓட்டுகள் மிக தாராளமாக உறுதியாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தவெக கட்சி துவங்கிய ஒரே ஆண்டில் 20 சதவீத ஓட்டு வங்கி என்பது மிகப்பெரிய பலமாக விஜய்க்கு அமைந்துள்ளது. ஆனால் முதல்வர் நாற்காலியில் அமர இந்த சதவீதம் போதாது என்ற நிலையில், வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற நிலையில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு ஓட்டு தவெக கட்சிக்கு விழ வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் விஜயிடம் ஆலோசனை கூறியிருக்கிறார்.

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக என கட்சியினர், கட்சி நிர்வாகிகள், கட்சி ஆதரவாளர்கள் தவிர்த்து முதல்முறை ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள், திராவிட கட்சிகளையே விரும்பாதவர்கள், நோட்டோவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டு போடவே வராதவர்கள், அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் என இந்த தரப்பு மக்களின் ஓட்டுகளை பெற்றால் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான ஓட்டுகளை தவெக அள்ளலாம் என்றும் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு ஆலோசனை கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்