- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களின் ஏகோபித்த அதிருப்தியை பெற்ற விசில் போடு பாடல்; பலத்த ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் -...

ரசிகர்களின் ஏகோபித்த அதிருப்தியை பெற்ற விசில் போடு பாடல்; பலத்த ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் – விளக்கம் கொடுத்து ஆறுதல் சொன்ன பிரபலம்!

- Advertisement -

தமிழ் புத்தாண்டு அன்று, கடந்த 14ம் தேதி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த, விசில் போடு பாடல் மிக அதிகளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதுவரை 30 மில்லியன் பேர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

ஆனால் இந்த பாடலில் விஜய் மட்டுமே இல்லாமல் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், மற்றும் அஜ்மல் ஆகிய 3 பேரும் நடனம் ஆடுவது போல் பாடல் காட்சி அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இந்த பாடலும், பாடலில் இடம்பெற்ற காட்சியும், பாடல் வரிகளும் ரசிகர்களுக்கு போதிய திருப்தி அளிக்கவில்லை.

- Advertisement -

மேலும் இந்த பாடல் காட்சியில், இசையும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் இந்த பாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. பார்வையாளர் எணணிக்கை முப்பது மில்லியனை கடந்து இருந்தாலும், பாடலைப் பார்த்த பலரும் சரியில்லை என்றுதான் தங்களது கமெண்டாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதுவே அனிருத் இசையமைத்திருந்தால், இந்த பாடல் வேற லெவலில் இருந்திருக்கும் என்று இந்த பாடலுக்கு இசையமைத்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் தாறுமாறாக திட்டி வருகின்றனர். விஜய் இதுவரை பாடிய பாடல்களிலேயே சொந்த குரலில் பாடியதில் இந்த பாடல் தான் ரொம்ப ரொம்ப சுமார் ரகம் என்றும் வெளிப்படையாக விஜயையும் விமர்சித்துள்ளனர். இப்படி ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சிதறடித்துள்ளது இந்த விசில் போடு பாடல்.

- Advertisement -

இது குறித்து பாடல் எழுதிய மதன் கார்க்கி கூறியிருப்பதாவது, எல்லா பக்கமும் பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சிலருக்கு தான் அதிருப்தி. மற்றபடி அனைவரும் இந்த பாடலை கொண்டாடுகின்றனர். இருந்தாலும் இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.

மேலும் இந்த பாடலுக்கு முதலில் சல்யூட் என்றுதான் பெயர் வைக்கலாம் என நினைத்தோம். அதன் பிறகு விசில் போடு என மாற்றப்பட்டது. நான்கு நண்பர்கள் பார்ட்டி கொண்டாடுவதை வைத்துதான் இப்பாடல் எழுதப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் பாடல் உருவான விதம் மட்டுமில்லாமல் சர்ச்சைக்கு பதில் தந்துள்ளார் இந்த பாடலை எழுதிய கவிஞர் மதன் காக்கி.

- Advertisement -

சற்று முன்