- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரசாந்த் படத்தை கைவிட்ட இயக்குனர் ஹரி, தெலுங்கு பக்கம் திடீரென ஒதுங்கியது ஏன்? அவரோட...

நடிகர் பிரசாந்த் படத்தை கைவிட்ட இயக்குனர் ஹரி, தெலுங்கு பக்கம் திடீரென ஒதுங்கியது ஏன்? அவரோட அடுத்த படம் ஹீரோ அந்த மாஸ் ஹீரோவா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய முதல் படம் தமிழ். இதில் பிரசாந்த் ஹீரோவாகவும் சிம்ரன் நாயகியாகவும் நடித்திருந்தனர். ஊர்வசி மனோரமா வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தாமிரபரணி கோவில் சாமி சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 பூஜை ஆறு வேங்கை வேல் ஐயா அருள் யானை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. நடிகர் விஜயகுமாரின் மருமகன்தான் ஹரி. ப்ரீதா விஜயகுமாரின் கணவர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விறுவிறுப்பான திரைக்கதையில் ஹரி இயக்கும் படங்கள் எல்லாமே பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. கடைசியாக நடிகர் விஷால் நடித்த ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியிருந்தார். இதில் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை.

இதைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடிக்கும் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டது. கடந்த 2025ம் ஆண்டு பிரசாந்த் பிறந்த நாளில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் மட்டுமே நடந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து அந்த படத்தை நடிகர் அதர்வாவை ஹீரோவாக வைத்து ஹரி இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் ஹரி தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி இருக்கிறார். மாஸ் மசாலா ஹீரோவான நடிகர் ரவி தேஜாவை சந்தித்து ஹரி கதை கூறியிருக்கிறார். இந்த கதை ரவிதேஜாவுக்கு பிடித்துவிட்டது.

அதனால் அவர் ஓகே சொன்னதால் இந்த படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் சென்னையில் ஹரி தலைமையில் நடந்து வருகிறது. இதுவரை தமிழில் தன் திறமையை காட்டிய இயக்குனர் ஹரி இப்போது தெலுங்கு பக்கம் சென்று இருக்கிறார். தெலுங்கில் அதிரடியான மசாலா படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆவதால் நிச்சயமாக ஹரிக்கு அவரது கதையில் உருவாகும் விறுவிறுப்பான தெலுங்கு படங்கள் அங்கு மாஸ் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்