நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 5 மாதங்களாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை. சென்சார் போர்டு இன்னும் சான்றிதழ் தரவில்லை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனது குறித்து சென்சார் மீது கடுப்பாக உள்ளது. அதை விட தமிழ் சினிமாத் துறை மீதும் பயங்கரமாக கோபம் வருகிறது.
அதற்கான காரணம் என்னவென்றால் ஜனநாயகன் படத்துக்கு இப்படி ஒரு முட்டுக் கட்டையை போட்ட போது திமுக ஆட்சி நடந்தது. விஜய் படத்துக்கு சப்போர்ட் செய்தால் திமுக மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாவோம் என்றுதான் எல்லோரும் வாயை பொத்திக்கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது விஜய் முதலமைச்சராகி விட்டார்.
இப்போதும் கூட ஜனநாயகன் படத்துக்கு எதிராக நடந்த அநீதிக்கு தமிழ் சினிமா உலகினர் வாயை திறக்காமல் உள்ளனர். சினிமா சார்ந்த அமைப்புகள் இதற்காக போராட முன்வந்ததாகவும் அதற்கு படத்தின் தயாரிப்பாளர் வேண்டாம். இது மேலும் ஜனநாயகன் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று கூறியதாகவும் சொல்லும் ஒரு தகவல் பொய்யானது. அது உண்மை இல்லை.
சென்சார் போர்டுக்கு சினிமாத்துறை மீது ஒரு பயம் வரவேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஏன் இன்னும் அதுபற்றி பேசாமல் இருக்கின்றனர் என்பது புரியவில்லை. ஆனால் சினிமாத்துறை சார்ந்த பல நிர்வாகிகள் தினமும் தலைமை செயலகத்துக்கு போய் பல கோரிக்கைளை முதல்வர் விஜயிடம் முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து யாருமே பேசவில்லை. விஜய் தரப்பில் இருக்கும் முக்கிய நபர்களாவது இதுபற்றி சினிமாத்துறை முக்கிய சங்க நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கோபமாக பேசியிருக்கிறார்.
மேலும் இது விஜய் நடித்த ஒரு படமாக பார்க்காமல் ஒரு பொதுவாக திரைப்படம் என்ற முறையில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீட்டை போட்ட தயாரிப்பாளர், அந்த பணத்தை வினியோகஸ்தர்களுக்கு திருப்பித் தர முடியாமல் சிரமப்படுகிற ஒரு சூழலில் இந்த படம் வெளியானால் பல பிரச்னைகள் தீரும் என்பதும் பொதுவாக ஒரு கருத்தாக இணையத்தில் வைரலாகி வருகிறது.





