- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் திருமணங்களுக்கு தான் என் ஆதரவு - லவ் மேரேஜ் படம் பாடல் வெளியீட்டு விழாவில்...

காதல் திருமணங்களுக்கு தான் என் ஆதரவு – லவ் மேரேஜ் படம் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பரபரப்பு பேச்சு!

- Advertisement -

கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மிகப்பெரிய வெற்றியை, வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது. இந்த படத்தில்தான் நடிகை லட்சுமி மேனன் அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

இந்த படத்துக்கு பின் நடிகர் விக்ரம் பிரபு பல படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் அந்த படங்கள் வரவேற்பை வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து லவ் மேரேஜ் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை சண்முக பிரியன் டைரக்ட் செய்து இருக்கிறார்.

- Advertisement -

விக்ரம் பிரபு சுஸ்மிதா பட் இந்த படத்தில் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். ரமேஷ் திலக் மீனாட்சி தினேஷ் அருள்தாஸ் முருகானந்தம் கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் லவ் மேரேஜ் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

இந்நிலையில் லவ் மேரேஜ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, லவ் மேரேஜ் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த படத்தின் சூட்டிங்கிலும் எனக்கு கிடைத்ததில்லை. இந்த படம் ஒரு நல்ல படமாக வர வேண்டும் என்ற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. அதே போல் இந்த படம் சிறப்பாக வரவேண்டும் என்று நான் மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்.

- Advertisement -

படப்பிடிப்பு நடந்த ஒரு மாத காலமும் குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணி செய்தோம். இது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. சினிமாவில் நடிகர் நடிகைகள் தாண்டி மற்ற கேரக்டர்களில் நடிப்போருக்கும் ஸ்கிரிப்ட் பேப்பர்கள் கிடைப்பது பெரிய விஷயம். சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று உதவி இயக்குனர்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். அந்த நிலை மாற வேண்டும்.

ஹீரோ ஹீரோகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் இதர நடிகர் நடிகைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழ் சினிமா இன்னும் பெரிய தளத்துக்கு செல்ல வேண்டும். அதுதான் என் விருப்பம். காதல் இல்லாமல் திருமணம் செட் ஆகாது. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப படங்களும் மாறிக் கொண்டிருக்கிறது, மக்களும் மாறிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். எனவே என் ஆதரவு என்றுமே காதல் திருமணங்களுக்கு தான் என்று நடிகர் விக்ரம் பிரபு பரபரப்பாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்