தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்காக அதிகம் மெனக்கெடும் ஒரே நடிகர் சியான் விக்ரம்தான். அவர் ஏற்கும் கேரக்டர் படத்தில் சிறப்பாக வர வேண்டும் என்பதால் பல மாதங்களுக்கு உடல் ரீதியாக பல விதங்களில் தன்னை வருத்திக் கொள்வார். அந்த கேரக்டரை மிக சிறப்பாக திரையில் கொண்டு வருவார்.
காசி ஐ மற்றும் சேது படங்களில் நடித்த போது தனது உடல் எடையை பலமடங்கு குறைத்து நடித்திருந்தார். அதே நேரத்தில் ஐ படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக மட்டுமே 120 கிலோ வரை தனது உடல் எடையை அதிகரித்தும் நடித்திருந்தார்.
படத்தில் தனது கேரக்டருக்கு ஏற்ப உடலை வருத்திக்கொள்ள நடிக்க சியான் விக்ரம் எப்போதுமே தயங்கியது இல்லை.
இதில் முக்கிய உதாரணமாக காசி படத்தில் கண் பார்வையற்றவராக விக்ரம் நடித்திருந்தார். கருவிழிகள் தெரியாதபடி அவர் கண்களை சொருகி சொருகி பார்வையை தடுத்ததால் ஒரு கட்டத்தில் பார்வையே பறிபோய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. கண் டாக்டர்கள் எச்சரித்தும் அப்படியே காசி படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் படங்களில் அவர் தாடியுடன்தான் காணப்படுகிறது. ஸ்கெட்ச் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் அவர் தாடி கெட்டப்பில்தான் இருந்து வருகிறார். இப்போது அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள வீரதீர சூரன் படத்திலும் விக்ரம் தாடியுடன்தான் காணப்படுகிறது.
சமீபத்தில் வீரதீர சூரன் படத்தில் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சியான் விக்ரம் தனது தாடி குறித்து வெளிப்படையாக ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால்தான் தாடி வளர்ப்பார்கள். இப்போதெல்லாம் காதலிப்பதற்காகவே பலரும் தாடி வளர்க்கின்றனர்.
தொடர்ச்சியாக நான் நடிக்கும் படங்களில் எல்லாம் நான் தாடி வளர்த்து வருகிறேன் என்று விக்ரம் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அப்படி என்றால் அவரும் காதலிக்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வயதான பலர் முகத்தின் சுருக்கம், கழுத்தின் சுருக்கம் தெரியாமல் இருக்க வயதை மறைக்க தாடி வளர்ப்பது வழக்கம்தான். அதையே நடிகர் விக்ரம் மாற்றிச் சொல்கிறார் என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.





