- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸ் கோரிக்கைக்கு உடனே ஓகே சொன்ன டைரக்டர் ராஜமௌலி, போடு வெடிய, - அப்போ தரமான...

பிரபாஸ் கோரிக்கைக்கு உடனே ஓகே சொன்ன டைரக்டர் ராஜமௌலி, போடு வெடிய, – அப்போ தரமான சம்பவம் ரசிகர்களுக்கு ரெடியா இருக்கு!

- Advertisement -

இந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக பெயர் சொல்லும் ஒரு முக்கிய டைரக்டராக வளர்ந்து நிற்பவர் டைரக்டர் ராஜமெளலி. இவர் பல முக்கிய படங்களை இயக்கியிருந்தாலும், பாகுபலி படம்தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தில், பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ரானா டகுபதி, சத்யராஜ், நாசர், சுதீப், அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரோகிணி உள்ளிட்ட பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து ராஜமௌலி ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடித்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து டைரக்டர் ராஜமௌலி இப்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். பாகுபலி முதல் பாகத்தில் ஒரு பாடல் காட்சியில் ராஜமௌலி கேமியோ ரோலில் நடித்திருப்பார். பல முன்னணி இயக்குனர்கள் ராஜமௌலியை படத்தில் நடிக்க அழைத்தும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் பாகுபலி படத்தில் நடித்த வகையில், பிரபாஸ்சும் ராஜமௌலியும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். குறிப்பாக பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை தனது குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார். தற்போது பிரபாஸ், கல்கி என்ற பான் இந்தியா படத்தில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடித்தி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடித்துள்ளார்.

கல்கி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கேமியோ ரோலில் நடிக்குமாறு ராஜமௌலியை, நடிகர் பிரபாஸ் அழைத்தார். பிரபாஸ் கேட்டுக் கொண்டதால் அதை மறுக்காத டைரக்டர் ராஜமௌலி, கல்கி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தார். பல முக்கிய இயக்குனர்கள் அழைத்தும் நடிக்க வராத ராஜமௌலி, தனது ஆஸ்தான ஹீரோ பாகுபலி பிரபாஸ் சொன்னதும் சம்மதித்து, கல்கி படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்