- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடரும் தோல்வி படங்கள்… நடிகர் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு - ஏமாற்றத்தில் இயக்குனர்கள்!

தொடரும் தோல்வி படங்கள்… நடிகர் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு – ஏமாற்றத்தில் இயக்குனர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற ஒரு சிறந்த நடிப்பு கலைஞனாக இருந்து வருபவர் சியான் விக்ரம். நடிப்புக்காக கேரக்டருக்காக மெனக்கெட்டு உடலை வருத்திக்கொண்டு நடிப்பவர் கமல்ஹாசனை போலவே சியான் விக்ரமும் ஒருவர். குறிப்பாக ஐ அந்நியன் காசி சேது போன்ற படங்களை சொல்லலாம்.

ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விக்ரமுக்கு சமீபகாலமாக தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்து வருகின்றன. குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா தங்கலான் சமீபத்தில் அருண்குமார் இயக்கத்தில் வெளியான வீரதீர சூரன் 2 ஆகிய படங்கள் விக்ரமுக்கு சரியான வரவேற்பை பெற்றுத் தரவில்லை.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பு மிக அழுத்தமாக நேர்த்தியாக இருந்தாலும் அது மல்ட்டி ஸ்டார்ஸ் படமாக இருந்ததால் அந்த படத்தின் வெற்றியை விக்ரமின் தனிப்பட்ட வெற்றியாக பார்க்க முடியாது. அதனால் நடிகர் விக்ரம் தனது அடுத்த படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. பலமுறை கதை கேட்டு நடிகர் விக்ரம் திருத்தம் சொன்ன நிலையில், இயக்குனர் சொன்ன கதை விக்ரமை திருப்திபடுத்தவில்லை. இறுதியில் அந்த படமே வேண்டாம் என்று நடிகர் விக்ரம் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

- Advertisement -

அதன்பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேறு ஒரு இயக்குனரை நடிகர் விக்ரமிடம் அனுப்பி இருக்கிறார். அவர் நடிகர் பகத் பாசிலுக்காக உருவாக்கிய ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதை கமர்ஷியல் ஆக இல்லை. தியேட்டரில் ரசிகர்கள் விரும்பும் எக்ஸ்பீரியன்ஸ்சை இந்த படம் தராது என்று மறுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் 2 படங்களையுமே நடிகர் சியான் விக்ரம் வேண்டாம் என தவிர்த்த நிலையில், அந்த இயக்குனர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ந்து தோல்வி படங்களை தந்தால் இனி சினிபீல்டில் நிலைத்திருக்க முடியாது. எப்போதோ தந்த வெற்றி படங்களை வைத்து இப்போது பீல்டில் நிற்க முடியாது என்பதை தெரிந்துக்கொண்ட விக்ரம், மிகச்சிறந்த கதையை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்