- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் வெளியாவதற்கு முன்பே குவியும் பண மழை.. உண்மையான சூப்பர் ஸ்டார் கமல் தான் போல.....

படம் வெளியாவதற்கு முன்பே குவியும் பண மழை.. உண்மையான சூப்பர் ஸ்டார் கமல் தான் போல.. மகிழ்ச்சியில் கமல்

- Advertisement -

ஒரு மேடையில் யார் படத்திற்கு அதிக பிசினஸ் நடக்கிறதோ அதிக வருமானம் வருகிறதோ அவர்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று நடிகர் ரஜினி கூறியிருப்பார். தற்போது அதற்கு ஏற்ற வகையில் நடிகர் கமலஹாசனின் படம் தொடங்குவதற்கு முன்பே வசூலில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது.

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பெறாமல் கமல்ஹாசன் தவித்து வந்தார். அவர் நடித்த பாபநாசம் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியது. அதுவே அவருக்கு பெரிய வெற்றியாக தெரிந்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினி எப்போதும் போல் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கமலின் வாழ்க்கையே மாற்றிய திரைப்படம் என்றால் அது விக்ரம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 480 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் கமலின் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்பட்டது.

அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதன்படி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சேர்த்து இந்தப் படத்தை netflix நிறுவனம் 220 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தற்போது எச் வினோத்துடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கே எச் 233 என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள் இந்தப் படத்தையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

இது தமிழ் சினிமா வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும். இதனால் பிசினஸில் தற்போது விஜய், ரஜினி ஆகியோரை முந்தி கமல் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார்.மேலும் கமல் ப்ராஜெக்ட் கே படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். இதனால் தென் இந்தியாவில் நம்பர் ஒன் என்ற பெருமை கமலுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்