- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு செல்லலாம் என்று இருந்தேன்... விஜய்யின் தம்பி உருக்கம்...

சினிமாவை விட்டு செல்லலாம் என்று இருந்தேன்… விஜய்யின் தம்பி உருக்கம்…

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் திரை உலக மட்டுமல்ல இந்திய திரை உலகமே போற்றும் இடத்தில் இருக்கிறார். இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக விளங்கும் விஜய், சமீப காலமாக தனது திரைப்படங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் என்றுமே அந்த நிலையை அவர் அடைந்ததே இல்லை. இப்படியான சூழலில் தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பிறகு ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடிப்பேன் என்றும், அதன் பிறகு முழு நேர அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது கட்சிக்கு அவர் தமிழக வெற்றி கழகம் என்றும் பெயர் வைத்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க அவரது தம்பி உறவுடைய விக்ராந்தும் உயரத்தைத் தொட போராடி வருகிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார்.

- Advertisement -

விஜய்யின் சகோதரர் என்பதால் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வந்த இடம் தெரியாமல், மறைந்து போனது. இதிலிருந்து ஒரு வெற்றிக்காக போராடி வந்தார் விக்ராந்த். தொடர்ந்து நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம் என அவர் நடித்து வெளியான அத்தனை திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன.

மார்க்கெட் என்பதை பெறுவதற்குள் அதனை இழந்த விக்ராந்துக்கு, ஆறுதலாக அமைந்த திரைப்படம் பாண்டியநாடு. அந்தத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த விக்ராந்த், தான் தோன்றிய காட்சிகளில் ரசிகர்களை கை தட்ட வைத்தார். முதல் முறையாக, விக்ராந்தை பற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்தன. ரசிகர்களும் அவரது கேரக்டர் படத்தில் நன்றாக இருப்பதாகவும், அவர் படம் முழுவதும் வந்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.

- Advertisement -

இதன்பிறகு சில சில படங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். இதில் பக்ரீத் திரைப்படம் விக்ராந்த் நடிப்பிற்காக பேசப்பட்டது. இதே போல் கவண் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படியான சூழலில் தற்போது அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்து பேசி இருக்கும் விக்ராந்த், பாண்டியநாடு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நான் தவறான பாதையை தேர்வு செய்திருந்தேன். அந்தப் படம் வெளியான பிறகு எனது கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியது. இதை எடுத்து கடந்த ஏழு வருடங்களாக நான் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். கடந்த ஓராண்டாக சினிமாவை விட்டு விலகும் ஒரு எண்ணத்தில் இருந்தேன். அந்த சமயத்தில்தான் ஐஸ்வர்யா மேடம் எனக்கு லால் சலாம் திரைப்படத்திற்கான வாய்ப்பை தந்தார்கள். அந்த சமயத்தில் நாம் நிச்சயம் சினிமாவை விட்டு விலகக் கூடாது என்று முடிவு செய்தேன் என பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்