- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென சூப்பர் ஸ்டாரை சந்தித்த நடிகர் விமல் - தலைவர் 173 படத்திலும் அவரும் நடிக்கிறாரா?...

திடீரென சூப்பர் ஸ்டாரை சந்தித்த நடிகர் விமல் – தலைவர் 173 படத்திலும் அவரும் நடிக்கிறாரா? – சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

ஆரம்பத்தில் கில்லி குருவி போன்ற படங்களில் சில காட்சிகளில் துணை நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் விமல். பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனும் விமலும் இணைந்து நடித்திருந்தனர்.

அதன்பிறகு விமல் நடித்த களவாணி படம் அவருக்கு பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து விமல் ஜன்னல் ஓரம் தேசிங்கு ராஜா வாகை சூடவா கலகலப்பு மஞ்சப்பை கன்னிராசி 2 புலிவால் தூங்காநகரம் என பல படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக இருந்து அவரை பேச வைத்தன.

- Advertisement -

எனினும் நடிகர் விமல் இன்னும் நட்சத்திர நாயகனாக முன்னணி இடத்துக்கு வரவில்லை. எனினும் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நடிகர் விமல் திடீரென நேரில் சந்தித்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைவர் 173 படத்தில் ரஜினியுடன் விமலும் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை நடிகர் விமல் திடீரென சந்தித்ததற்கு என்ன காரணம்? ரஜினியின் அடுத்த படத்தில் விமல் நடிப்பதற்காக சந்தித்தாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய காரணமாக ரஜினிகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினாரா? உண்மையில் என்ன நடந்தது என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து உண்மைத் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் விமல் தரப்பில் இது குறித்து கூறுகையில், இது திட்டமிட்ட ஒரு சந்திப்பு அல்ல. தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு. சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ஜெயிலர் 2 படத்துக்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடித்து வரும் படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தது.

ரஜினி அருகில் டப்பிங் பேசிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு நடிகர் விமல் மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். ரஜினியும் தன் வழக்கமான பாணியில் வளரும் நடிகரான விமலை கட்டியணைத்து அன்பு பாராட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி விட்டது. அதனால் விமல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் பற்றிய விரிவான அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்