- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ நட்சத்திரத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருப்பது யார் தெரியுமா?... அப்போதே, செம கணக்கு போட்டிருக்கும் இயக்குனர்...

துருவ நட்சத்திரத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருப்பது யார் தெரியுமா?… அப்போதே, செம கணக்கு போட்டிருக்கும் இயக்குனர் கவுதம் மேனன்…

- Advertisement -

கோப்ரா, பொன்னியின் செல்வன் திரைப்படங்களை தொடர்ந்து சீயான் விக்ரம் அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கும் இந்த திரைப்படத்தில், மலையாள நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுதந்திரத்திற்கு முன்பு கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. சமீபத்தில் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, தங்கலான் திரைப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில், அடர்ந்த தாடி, வகுடி ஏறிய நெற்றி, கையில் வேல் கம்பு என மிரட்டும் தொனியில் இருந்தார் விக்ரம்.

- Advertisement -

கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போதே, தங்கலான் திரைப்படம் தரமுடன் எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரமுக்கு இந்த திரைப்படம், நிச்சயம் கம் பேக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விக்ரம் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் வேகமெடுத்து வருகிறது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு காரணங்களால் துருவ நட்சத்திரத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இருப்பினும், படத்தில் சின்ன சின்ன கிளிம்ப்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார் கௌதம் மேனன். வீடியோவில் செம ஸ்டைலிஸாக இருந்த விக்ரம், ஜான் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக ஜெயிலர் பட வில்லன் விநாயகம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், விநாயகம் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக படத்தில் அவரது மலையாளம் கலந்த தமிழை பலரும் ரசித்தனர். ரஜினியை மிரட்டி அவர் பாடலுக்கு நடனமாடும் காட்சியும் இணையத்தில் வைரலானது. தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரத்திலும் அவர் வில்லனாக நடித்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. இந்தப் படம் வரும் தீபாவளி என்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்