- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட் எதுவும் நாளை வெளியாக போகிறதா? படத்தை தயாரிக்கும் கேவிஎன்...

தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட் எதுவும் நாளை வெளியாக போகிறதா? படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் இப்படி ஒரு பில்டப் செய்திருக்கிறதே…

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் தி கோட். உலகம் முழுவதும் 445 கோடி ரூபாய் வசூலித்து, தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டில் அதிக வசூலில் முதலிடம் பிடித்தது தி கோட் படம்தான் என்ற சாதனையை படைத்தது. இப்போது எச் வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் விஜய் நடிக்கும் 69வது படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் பிரகாஷ்ராஜ் பிரியாமணி கௌதம் மேனன் மமிதா பைஜ! பூஜா ஹெக்டே நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமாகவும் இது உள்ளது. ஏனெனில் இந்த படத்துக்கு பின் இனி நடிக்க போவதில்லை என விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மேலும் கே ஜி எஃப் நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் என்ற படத்தையும் கே வி என் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக என் பொம்முக்கு அம்மாவுக்கு என்ற படத்தில், நடித்திருந்தார். மேலும் மாதவனுடன் நள தமயந்தி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

டாக்ஸிக் என்ற இந்த படத்தில் கியாரா அத்வானி ஹூமா குரேஷி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக்சன் கலந்த அதிரடி கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, 2025ம் ஆண்டுக்கான மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அதனால் உங்கள் காலண்டரில் ஜனவரி 2ம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அதில் தெரிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தளபதி 69 படத்தின் அப்டேட்டா அல்லது டாக்ஸிக் படத்தின் அப்டேட்டா என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் தளபதி ரசிகர்கள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்