- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாதுறைக்கு அவர்தான் அமைச்சரா? நடிகர் விஷால் எதிர்ப்பு - நீங்களே அதை பார்க்கலாமே என்றும் முதல்வருக்கு...

சினிமாதுறைக்கு அவர்தான் அமைச்சரா? நடிகர் விஷால் எதிர்ப்பு – நீங்களே அதை பார்க்கலாமே என்றும் முதல்வருக்கு கோரிக்கை!

- Advertisement -

தவெக தலைவர் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை மற்றும் திரைப்பட தொழில்நுட்ப துறை அமைச்சராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களின் துறைகள் மற்றும் இலாகாக்கள் நேற்று முறையாக ஒதுக்கி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் சினிமோட்டோகிராப் சட்டம் துறை ஒதுக்கப்பட்டு இருப்பது சற்று மன வேதனை அளிக்கிறது.

- Advertisement -

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அடிமட்டத்திலிருந்து இந்த திரை உலகின் ஒரு அங்கமாக இருந்து வரும் நம் முதல்வரை விட இந்த துறையில் தற்போதைய சூழல் என்ன என்பது குறித்து, குறைந்த அனுபவமோ அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் நாம் ஒரு அமைப்பாகவோ அல்லது சங்கமாகவோ எவ்வாறு நம் கோரிக்கைகளையும் குறைகளையும் கொண்டு சேர்க்க முடியும்?

தற்போது நம் திரையுலகம் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த சூழலில் திரையுலகினருக்கு குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு யார் ஒரு நம்பிக்கைக்கு ஏற்றவராக இருக்க முடியும்? அன்புள்ள முதல்வரே. தயவு செய்து கீழே உள்ள கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுகிறோம். அரசு டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துங்கள்.

- Advertisement -

இது அரசு வருவாயை கொண்டு சேர்ப்பதுடன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் வரை இணைய சேவை கட்டணமாக கூடுதலாக செலுத்தும் பார்வையாளர்களுக்கும் பெரிய நிம்மதியாக அமையும். உள்ளாட்சி அமைப்புகளின் வரியை ரத்து செய்யுங்கள். ஒரே இந்தியா ஒரே வரி என்ற விதிக்கு மாறாக இந்தியாவிலேயே இரண்டு வரிகளை விதிக்கும் ஒரே மாநிலமாக நாம் மட்டுமே இருக்கிறோம். சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியத்தை உயர்த்துங்கள். தற்போது சிறு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சொற்ப மானிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதை ஒரு கோரிக்கை மனுவாக முதல்வரிடம் அளிக்கலாம் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த கோரிக்கைகள் கடந்து 9 ஆண்டுகளாக தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. ராஜ்மோகனை குறைத்து மதிப்பிடுவதற்காக இதை சொல்லவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. முதல்வரால் மட்டுமே எங்களுக்கு தேவையான சில முக்கிய நிவாரணங்களை வழங்க முடியும். இறைவனின் இறைவனின் ஆசி என்றும் இருக்கட்டும் என்று அதில் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்