- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, அதனால்தான் நான் மேடையில் மயங்கி விழுந்தேனா? இணையத்தில் வைரலான தகவலுக்கு நடிகர் விஷால் தந்த...

என்னது, அதனால்தான் நான் மேடையில் மயங்கி விழுந்தேனா? இணையத்தில் வைரலான தகவலுக்கு நடிகர் விஷால் தந்த பதிலடி!

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் மிஸ் திருநங்கை 2025 அழகிப்போட்டி நடந்தது. ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்கும் இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேடையில் இருந்த திருநங்கைகளுடன் அவர் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென நடிகர் விஷால் மயங்கி சரிந்து விழுந்தார். போதிய காற்றோட்டம் இல்லாததால் கூட்ட நெரிசல் காரணமாக விஷால் மயங்கி விழுந்ததாக சொல்லப்பட்டது. உடனடியாக கைத்தாங்கலாக மேடையை விட்டு இறக்கி விடப்பட்ட அவரை, முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

நடிகர் விஷால் அந்த நாளில் ஜூஸ் மட்டுமே குடித்ததாகவும் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததாகவும் அதிக தூர பயணம் மற்றும் கூட்ட நெரிசலில் விழாவில் பங்கேற்றதால்தான் மயங்கி விழுந்ததாகவும் தகவல் பரவியது. டயட் காரணமாக பல ஆண்டுகளாக விஷால் அரிசி சாதமே சாப்பிடுவது இல்லை என்றும் தகவல் வெளியானது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் விஷாலை பரிசோதனை செய்த டாக்டர்கள், உடல் ரீதியாக எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை. சரியான நேரத்தில் சரியாக சாப்பிடாததால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் பலவீனம்தான் இதற்கு காரணம், சத்தான உணவுகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் இந்த சம்பவத்தை அடுத்து சில நாட்களாக நடிகர் விஷால் பயங்கர குடிபோதைக்கு அடிமையாகி விட்டார். மிஸ் திருநங்கை விழா மேடையில் அதீத போதை காரணமாகவே அவர் மயங்கி விழுந்திருக்கிறார். மதகத ராஜா பட விழாவில் அவரது கைகள் பயங்கரமாக நடுங்கியதற்கும் அவரது குடி பழக்கம்தான் காரணம் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இதற்கு பதில் தந்துள்ள நடிகர் விஷால், நான் மதுபானம் குடிப்பதை நிறுத்தி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்று கூறியிருக்கிறார். நடிகர்கள் பலருக்கும் குடிப்பழக்கம் இருந்தாலும் சினிமாவில் நடிக்க அவர்களது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் ஒரு கட்டத்தில் டாக்டர் அறிவுரைப்படி மதுப்பழக்கத்தை தவிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால் 2 ஆண்டுகளுக்கு முன்பே மதுப்பழக்கத்தை கைவிட்டு விட்டதாக கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்