- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? - அதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது - ஓபனாக...

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? – அதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது – ஓபனாக பேசிய நடிகர் விஷால்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வர போகிறார் என்ற ஒரு பரபரப்பான தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கர படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்துள்ள தனுஷ் மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படி தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூழலிலும் அடிக்கடி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துவதை தனுஷ் வழக்கமாக செய்து வருகிறார்.

- Advertisement -

தனது மன்றத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து மன்ற செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அன்னதானம் இரத்ததானம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும் மக்களின் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தவும் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தவும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கவும் தனுஷ் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக தலைவர்கள் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட அளவில் மட்டுமின்றி தொகுதி வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நற்பணி மன்றங்களை தொடங்கி புதிய உறுப்பினர்களை அதிகளவில் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் முயற்சியாக எதிர்பார்க்கப்பட்டாலும் தனுஷின் அதிரடி மாற்றங்கள் அரசியல் களத்தில் அவரது வருகைக்காக அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால் கூறுகையில், தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக பல்வேறு பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் அப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தால் முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. தனுஷ் சிறந்த நடிகர், இயக்குனர். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்