இந்தி படவுலகில், பாலிவுட் ஸ்டார்களில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சிறந்த நடிகராக பல படங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியவர். படங்களில் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவரது நடிப்பில் தங்கான் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அமீர்கான் தயாரிப்பில், அவர் ஹீரோவாக நடித்த படம் லால் சிங் சத்தா. இந்த படத்தில் கரினா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படம், பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை.
இந்த படம் வெளியான சில தினங்களிலேயே, லால் சிங் சத்தா படத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை, படம் தோல்விதான் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. இந்த நிலையில், படக்குழுவினர் அனைவரையும் பார்ட்டிக்கு அழைத்துள்ளார். அப்போது, ஆச்சரியத்துடன் அங்கு படக்குழுவினர் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய நடிகர் அமீர்கான், இந்த படத்தில் நீங்கள் செய்த பணி மகத்தானது. நீங்கள் அனைவருமே இந்த படத்துக்காக மிக சிறப்பாக பணிசெய்து, உங்களது முழு ஒத்துழைப்பையும், உழைப்பையும் தந்தது பாராட்டுக்குரியது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை, லால் சிங் சத்தா படம் வெளியாகி ஓராண்டு கடந்த நிலையில் அந்த படத்தில் காஸ்டிங் இயக்குநராக பணிசெய்த முகேஷ் சப்ரா என்பவர், இப்போது ஒரு நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், படக்குழுவினர் மட்டுமே கலந்துக்கொண்டதால், இந்த பார்ட்டி விவரம் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.
வழக்கமான ஒரு ஹீரோ நடித்து, அந்த படம் பிளாப் ஆனாலே கதாநாயகன் மன உளைச்சலில் தவிப்பார். அதுவும் தயாரிப்பாளராகவும் அவரே இருந்தால் அந்த நஷ்டத்தை, ஏமாற்றத்தை சகித்துக்கொள்வது மிகவும் சிரமமான விஷயம். படம் வெற்றி பெறாததற்கு, படக்குழுவினர்தான் காரணமோ, என்ற கோபமும், ஆதங்கமும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு படத்தின் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை என்பதை தெளிவாக புரிந்து, சிறப்பாக பணிபுரிந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பார்ட்டி வைத்து பாராட்டிய அமீர்கான், உண்மையில் ஒரு மிகப்பெரிய ஸ்டார்தான்.





