- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு வாழ்த்துகள், மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையா? - ஆவேசப்பட்ட நடிகர்...

நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள், மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையா? – ஆவேசப்பட்ட நடிகர் விஷால்

- Advertisement -

நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படப்பிடிப்புக்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக, லண்டன் சென்றுவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். அவர் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக, தகவல் பரவி வருகிறது. விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை, அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது மகன் விஷால் குறித்து பேசிய அவரது அப்பா ஜிகே ரெட்டி, முதலில் விஷால், அஜீத் விஜய் சூர்யா போல, சினிமாவில் நிறைய சம்பாதிக்க வேண்டும். பிறகு கல்யாணமாகி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஷால் நடித்த படங்கள், கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அவரது பல படங்கள் பிளாப் ஆன நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படத்தின் நாயகன் விஷால் அல்ல, நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு, பிறகு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அரசியல் என்பது ஒரு துறை கிடையாது. அரசியலை ஒரு பொழுதுபோக்காக பார்க்காமல், அதை மக்களுக்கு செய்யும் ஒரு சேவையாக பார்க்க வேண்டும்.

- Advertisement -

எல்லோருமே அரசியல்வாதிகள். வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் எல்லாம் போட்டியிடுவேன் என எதிர்பார்க்கவில்லை. நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போதே அதிக கட்சிகள் உள்ளன.

நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கும். என் பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்