- Advertisement -
இந்தியில் மிக பிரமாண்டமாகி உருவாகியுள்ள இராமாயணா படம் வருகிற தீபாவளிக்கு முதல் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சீதையாக சாய் பல்லவியும் இராவணன் கேரக்டரில் கேஜிஎஃப் டாக்ஸிக் படங்களில் நடித்த நாயகன் யஷ்சும் நடித்திருக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் யஷ் கூறியதாவது, சாய் பல்லவியை பார்க்கும்போது சீதையை பார்ப்பது போலவே இருக்கும். அவர் மிகவும் அர்ப்பணிப்புடனும் கடவுள் பக்தியுடனும் இருப்பார். அவர் சீதையாக இராமாயணா படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சீதையின் புனிதத்தையும் அவருக்குள் இருக்கும் பிரகாசத்தையும் தனது நடிப்பின் மூலம் சிறப்பாக சாய் பல்லவி வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறியிருக்கிறார்.





