- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது கார் டிரைவரை தனக்கு வில்லனாக நடிக்க வைத்த நடிகர் யஷ் - கேஜிஎப் படத்துக்கு...

தனது கார் டிரைவரை தனக்கு வில்லனாக நடிக்க வைத்த நடிகர் யஷ் – கேஜிஎப் படத்துக்கு பின்னாடி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்குதா?

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை எப்போது யாருக்கு எப்படி சுக்கிர திசை அடிக்கும் என்றே தெரியாது. அதே நேரத்தில் கோபுரம் போல மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர் எப்போது அதலபாதாளத்துக்கு செல்வார் என்பதும் தெரியாது. அதிர்ஷ்ட காற்று அடித்தால் தான் சாதாரண மனிதர்கள் கூட சினிமாவில் சரித்திரம் படைக்க முடியும்.

நடிப்பாற்றல் திறமை அழகு தோற்றம் என இருந்தாலும் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களுக்கு சினிமாவில் உரிய இடம் கிடைக்காமல் ஒரு கட்டத்தில் பலத்த தோல்வியை சந்திக்கின்றனர். மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகளின் வாரிசுகள் கூட சில படங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் ரசிகர்களால் ஓரம் கட்டப்படுகின்றனர்.

ஆனால் கேஜிஎப் 1 படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜூ நடிப்பை யாராலும் மறக்க முடியாது. அவர் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார். தொடர்ந்து கேஜிஎப் 2ம் பாகத்திலும் அவர் நடித்திருந்தார். இவர் கருடாராம் என்றும் அழைக்கப்படுகிறார்.

கேஜிஎப் 1 மற்றும் 2 படங்களில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து தமிழில் ராமச்சந்திர ராஜூ பல படங்களில் நடித்தார். குறிப்பாக கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் யானை மகாசமுத்திரம் அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ராமச்சந்திர ராஜூ என்கிற கருடாராம், உண்மையில் நடிகர் யஷ்ஷின் கார் டிரைவர் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.ராமச்சந்திர ராஜூ நடிகர் யஷ்ஷூக்கு பாதுகாவலர் மற்றும் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் யஷ் உடன் இணைந்து பயணித்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் தான் இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎப் படத்தின் கதையை கூற வந்தபோது ராமச்சந்திர ராஜூவின் தோற்றத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறார். அவருக்குள் இருக்கும் நடிப்பு ஆர்வத்தையும் தெரிந்து கொண்டார். பிறகு நடிகர் யஷ், தனது டிரைவர் ராமச்சந்திர ராஜூவின் நடிப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அதன்பிறகு கேஜிஎப் படத்தில் அந்த கருடாராம் கேரக்டரில் நடிகர் ராமச்சந்திர ராஜூ வில்லன் நடிப்பில் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்