- Advertisement -
Homeபொழுதுபோக்குபுது வெள்ளம் நீங்க, சுத்தமாக இருக்கணும் லஞ்சம் ஊழல் இல்லாம ஆட்சி நடத்தணும் -...

புது வெள்ளம் நீங்க, சுத்தமாக இருக்கணும் லஞ்சம் ஊழல் இல்லாம ஆட்சி நடத்தணும் – தமிழக முதல்வர் விஜய்க்கு அட்வைஸ் செய்த சீனியர் நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஒய் ஜி மகேந்திரா. கடந்த 1980 90களில் ரஜினி கமல் படங்களில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர். இப்போதும் மாநாடு மனிதன் தெய்வமாகலாம் போன்ற படங்களில் ஒய்ஜி மகேந்திரா நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக முதல்வரானது குறித்து அவர் வெளிப்படையாக சில கருத்துகளை கூறியிருக்கிறார்.

அந்த வீடியோவில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்து ஜெயித்திருக்கிறார். காமராஜர் பக்தவச்சலம் தவிர அண்ணாதுரை முதல் இன்று விஜய் வரை எல்லாருமே அரசியலில் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். அதனால் சினிமாக்காரர் என்றால் இளப்பமா என்றால் அப்படி கிடையாது.

- Advertisement -

அரசியலுக்கு வந்த யாருக்குமே முதலில் ஆட்சி செய்த அனுபவம் இருக்காது. அரசியல் அனுபவம்தான் அவர்களுக்கு இருந்தது. ஆட்சியை அரசை நடத்துவது அனுபவம் இருந்தது இல்லை. வந்து உட்கார்ந்த பிறகு ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துதான் எல்லாருமே கத்துக்கறாங்க. அதே மாதிரி விஜயும் கத்துக்கணும்.

நல்லபடியாக செய்யணும். விஜயிடம் ஒரே ஒரு கோரிக்கை தான். பாகுபாடின்றி சரி சமமாக எல்லோருக்கும் அவர் நீதி வழங்க வேண்டும். இந்த பக்கம் கொஞ்சம் சாய்வாரா, அந்த பக்கம் கொஞ்சம் சாய்வாரா என்று விமர்சிப்பார்கள். எல்லோரையும் சமமாக அரவணைத்துக் கொண்டு போகிற ஒரு முதல்வராக இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்க அசெம்ப்ளியில் எதையும் வெறுக்கிற மாதிரியான பேச்சை அனுமதிக்க கூடாது. எதையும் அழிக்கணும் என்று பேசுபவர்களை அனுமதிக்காதீர்கள். என்னுடைய அரசு எல்லோரையும் வாழ வைக்கிற அரசு என்று சொல்லி புரிய வையுங்கள். அப்படி செய்தாலே நீங்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யலாம். அதற்கு காரணம் மக்களின் அன்பு உங்களிடம் இருக்கிறது. அவர்கள் அன்பு இல்லாவிட்டால் நீங்கள் வந்திருக்க முடியாது.

மாற்றத்தை விரும்பி உங்களை அமர வைத்துள்ளனர். புதிய வெள்ளம் நீங்க. அது சுத்தமான வெள்ளமாக இருக்கணும். லஞ்சம் ஊழல் இல்லாம ஆட்சி நடத்தினாலே போதும். அதுதான் பெரிய புகாராக உள்ளது. தமிழ்நாட்டின் அடையாளத்தை எப்போதும் விடக்கூடாது. அதே நேரத்தில் மத்திய அரசுடன் எப்போதும் மோதிக்கொண்டும் இருக்க கூடாது. நமக்கும் வேலை நடக்கணும். அப்பப்போ தட்டி கொடுத்து வேலை வாங்கணும் என்று நடிகர் ஒய்ஜி மகேந்திரா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்