- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசிய சீனியர் நடிகர் ஒய் ஜி மகேந்திரா, அட...

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசிய சீனியர் நடிகர் ஒய் ஜி மகேந்திரா, அட காமராஜர் கூட விஜயை ஒப்பிட்டு பேசி இருக்கிறாரே? – உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ஒய் ஜி மகேந்திரன், இப்போது ஒய் ஜி மகேந்திரா என்று அழைக்கப்படுகிறார். கடந்த 1980, 90களில் ரஜினி, கமலுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். குறிப்பாக சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் இவரது நடிப்பை இப்போதும் ரசிக்கலாம். ரஜினிக்கு மிகவும் நெருங்கிய உறவினர் ஒய் ஜி மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டது முதல், ஒய்ஜி மகேந்திரா நடித்த ஒரு காட்சி, வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகிறது. மாநாடு படத்தில், இறுதி காட்சியில், படத்தில் முதல்வராக நடித்திருந்த எஸ்ஏ சந்திரசகேரிடம் அவரது கட்சியில் பொதுச் செயலாளராக இருக்கும் ஒய் ஜி மகேந்திரா பேசிய அந்த வசனங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

- Advertisement -

என்னய்யா கட்சி நடத்தறீங்க, முதல்ல உன் அப்பா முதல்வரா இருந்தார். அப்புறம் நீ இருக்கிறே, அப்புறம் உன் பையன் இருப்பான், அப்புறம் அவன் பையன் வருவான். என்ன, முதல்வர் பதவி உங்களுக்கே தான் சொந்தமா? நாங்க எல்லாம் முதல்வர் ஆகக் கூடாதா, எங்களுக்கு எல்லாம் பதவி ஆசை வரக்கூடாதா, நாங்க உங்களுக்கு கோஷம் போட்டுட்டே இருக்கணுமா என அவர் கேட்டது இப்போது டிரண்டாகி விட்டது.

தற்போது, நடிகர் ஒய் ஜி மகேந்திரா பேசிய மற்றொரு வீடியோ காட்சியும் இப்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து அவர் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் விஜயுடன் ஒரு காட்சியில் ஒய்ஜி மகேந்திரா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது காமராஜருடன் விஜயை ஒப்பிட்டு ஒய்ஜி மகேந்திரா பேசியது குறித்து விஜய் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

ஒய் ஜி மகேந்திரா அதில் கூறியதாவது, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வரட்டும். அதிகம் பேசாத ஒரு அரசியல்வாதியை இனி பார்ப்போம்.பேசிப் பேசியே இந்த நாட்டை கெடுத்திருக்கின்றனர். மீட்டிங் போட்டு மீட்டிங் போட்டு கடந்த 50, 60 வருஷங்களாக நம்மை சாவடித்து விட்டனர். போதுமே இந்த ஆள் (விஜய்) செயல்படட்டுமே. திரும்பவும் நான் கேட்கிறேன் என்று தமிழை போட்டு புரட்டி எடுத்து பேசும் அரசியல்வாதிகளை நிறைய பார்த்து விட்டோம். அதெல்லாம் போதும். நிறைய கேட்டாகி விட்டது.

காமராஜர் என்ன பேசினார். ஆனால் இப்பவும் ஒத்துக்கொள்கிறோம் அவர்தான் சிறந்த அரசியல்வாதி என்று. காமராஜர் என்ன பேசினார். இந்தா, இந்த வேலையை முடி என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அந்த மாதிரி யார் வரப்போறாங்க. அப்படி விஜய் அதிகம் பேசாமல், செயல்படுகிற ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்கட்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சீனியர் நடிகர் ஒய் ஜி மகேந்திரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்