சினிமா நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே இயல்பிலேயே நல்ல அழகும், வசீகர தோற்றமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட அழகான நடிகர்களுக்கு மேக்கப் என்பது மிக அவசியமாகிறது. மேக்கப் இல்லாமல், சில நடிகர்களை நேரில் பார்த்தால் அடையாளமே தெரியாது என்று கூட சொல்பவர்கள் உண்டு.
தமிழ் சினிமாவில் குமரிமுத்து, செந்தில், போண்டாமணி, குள்ளமணி, பகோடா காதர், உசிலைமணி போன்ற காமெடி நடிகர்கள் அவர்களது உருவத் தோற்றத்தை கிண்டலாக பேசுவதை வைத்தே, சினிமாவில் காலடி பதித்தனர். நாளடைவில் நல்ல திறமையான நடிகர்களாகவும் அவர்கள் தங்களை வெளிப்படுத்தி ஜெயித்தனர்.
அப்படி ஒருவராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர்தான் காமெடி நடிகர் யோகிபாபு. சில படங்களில் இவரை, இவரது உருவத்தோற்றத்தை உடன் நடிக்கும் ஹீரோ உள்ளிட்ட நடிகர்களே கிண்டலடிக்கும் அளவுக்கு ஆரம்ப நாட்களில் இவரது சினிமா பயணம் இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, யோகி பாபு முன்னணி காமெடி நடிகரானார். குறிப்பாக, காக்கா முட்டை படத்தில் எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லே நீ என இவர் பேசும் டயலாக், செம டிரண்டிங் ஆனது. கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவையே ஒன்சைடு ஆக காதல் செய்வார் யோகி பாபு. அந்த அளவுக்கு காமெடி நடிப்பில் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
பிறகு தர்மபிரபு, கூர்கா, மண்டேலா போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் இவரது நடிப்பு பேசப்பட்டது. ஜெயிலர், தர்பார் போன்ற படங்களில் ரஜினியுடன் காமெடி செய்தார். தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோல்களில் நடிக்க யோகிபாபுவுக்கு அழைப்பு வந்து, இப்போது முன்னணி காமெடி நாயகரில் ஒருவராக உள்ளார். ஏனெனில் சூரியும், சந்தானமும் ஹீரோவாகி விட்டனர்.
இந்நிலையில், யோகிபாபுவிடம் நீண்டநாட்களாக ஒருவர் மேக்கப் மேனாக இருந்துள்ளார். அவருக்கு, படத்தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தினமும் ரூ.8 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. யோகிபாபு வசம்தான் வழக்கமாக மேக்கப் மேன் சம்பளம் தரப்படுமாம். ஆனால், அதில் ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, தினமும் ரூ. 3 ஆயிரம் வீதம் மேக்கப் மேனுக்கு சம்பளமாக தந்து, மீதியை யோகி பாபுவே வைத்துக்கொண்டு ஏமாற்றி உள்ளார். இதை தற்போது அறிந்த அந்த மேக்கப் மேன், அவரை அழகாக காட்ட தினமும் உழைக்கும் எனக்கே இப்படி துரோகம் செய்து விட்டாரே என, வேலையை விட்டு நின்றுவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால், நடிகர் யோகிபாபுவின் ஒரு சம்பளம் ரூ. 11 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது.





