- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரமோசனுக்கு வர நான் 7 லட்சம் ரூபாய் கேட்டேனா? எனக்கு பணம் தர வேண்டியவங்க லிஸ்ட்...

பிரமோசனுக்கு வர நான் 7 லட்சம் ரூபாய் கேட்டேனா? எனக்கு பணம் தர வேண்டியவங்க லிஸ்ட் எடுத்து தரட்டுமா? – நடிகர் யோகிபாபு தந்த பதிலடி!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் யோகிபாபு அவர் நடித்த கஜானா என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்கு வர ரூ. 7 லட்சம் கேட்டார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விழாவில் பேசிய படக்குழு சார்ந்த ஒருவர், இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்து பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் யோகிபாபு குறித்த இந்த குற்றச்சாட்டு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது.

இந்நிலையில் இன்று நடந்த ஜோரா கைய தட்டுங்க என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் யோகிபாபு பேசியதாவது, எனக்கு யார் உதவி செய்தாலும் அதை எப்போதும் மறக்க மாட்டேன். என் சம்பளத்தை நான் பிக்ஸ் செய்வதில்லை. வெளியில் இருப்பவர்தான் பிக்ஸ் செய்கின்றனர். என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அந்த சிச்சுவேஷன்ல தான் நான் போயிட்டு இருக்கேன்.

- Advertisement -

என்னுடைய சம்பளத்தை தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டால் கம்மி பண்ணிக்கிறேன். நல்ல கதை கேட்டு தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை அனுப்புங்கள். சொன்ன சம்பளத்தை நீங்களே வாங்கி கொடுத்துடுங்க. அதை கேட்டாதான் இங்க எதிரி ஆயிடுவோம். அதுதான் உண்மை.

நாம இங்கே நேத்தோ முந்தாநாளோ வரலை. யார் வேணாலும் என்ன வேணாலும் பேசலாம் என்பதற்கு. என் அசிஸ்டெண்ட். என்கிட்ட 3 அல்லது 4 வருஷம் வேலை பார்த்தவர். தம்பி ஒருத்தன் ஹீரோவா பண்ணப் போறேன்னு சொன்னான். ரொம்ப நல்ல விஷயம்டா போடா பண்றா என்று சொன்னேன். ஆனா அதுல 2 நாள் ஒர்க் பண்ணுங்கண்ணா ரொம்ப நல்லா இருக்கும்ணா என்றான்.

- Advertisement -

சரிடா என்று சொல்லி, எவ்ளோ பேருக்கு பண்றோம் வாடா என்று சொல்லி அந்த படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குதான் நான் 7 லட்சம் கேட்டேன் 8 லட்சம் கேட்டேன் என்றனர். ஜோரா கைய தட்டு இது என்னோட படம். நான்தான் வரணும். இல்லேன்னா தப்பாயிடும். என்கிட்ட அவங்க சொன்னாங்க. வந்துட்டோம்.

பெரியவங்க முன்னாடி இப்போ நான் சொல்றேன். எனக்கு எவ்ளோ பேர் பணம் தரணும் தெரியுங்களா? லிஸ்ட் எடுத்து கொடுக்கட்டுங்களா? உங்களால் வாங்கித் தர முடியும் என்றால் சொல்லுங்க. நான் லிஸ்ட் எடுத்து கொடுத்துடறேன். கண்டிப்பாக கொடுக்கறேன். அப்படி பேசாதீங்க, எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணிதான் நாம போயிட்டு இருக்கோம். பேசறவங்க பேசட்டும் கடவுள் பார்த்துப்பான் என்று அந்த விழாவில் நடிகர் யோகிபாபு பேசினார்.

- Advertisement -

சற்று முன்