- Advertisement -
வருகிற தீபாவளிக்கு சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. மத்தவங்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கடவுள் இருக்குன்னு நீங்க நம்புனீங்கன்னா நீங்க எதையும் யார்கிட்டயும் கேட்க வேண்டாம். அது தானாகவே நடக்கும் என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே பலத்த பாராட்டை கவனத்தை பெற்றுள்ளது.





