- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அரசியலுக்கு வந்த விஜய், ஆதரவு தர முன்வராத தமிழ் சினிமா; சில நடிகர்களும் பகிரங்கமாக...

திடீரென அரசியலுக்கு வந்த விஜய், ஆதரவு தர முன்வராத தமிழ் சினிமா; சில நடிகர்களும் பகிரங்கமாக எதிர்ப்பது ஏன்? – பின்னணி காரணம் இதுதான்!

- Advertisement -

நடிகர் விஜய் ஆரம்பத்தில் தன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற முடியவில்லை. இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. நாளைய தீர்ப்பு செந்தூரப்பாண்டி ரசிகன் தேவா ஆகிய படங்களில் நடித்த நிலையில், நடிகராக மட்டுமே கவனம் பெற்றார்.

அதன் பிறகு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்து பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த பிறகு விஜய் இமேஜ் பெரிய அளவில் உயர்ந்தது. முன்னணி நடிகராக மாறினார். பிறகு திருமலை கில்லி சிவகாசி திருப்பாச்சி போக்கிரி வாரிசு லியோ என அவர் உச்ச நிலைக்கு தமிழ் சினிமாவில் உயர்ந்தார்.

- Advertisement -

ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய்தான். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரது வீட்டு வாசலில் தவம் இருக்காத குறையாத காத்திருக்கும் நிலையில், சினிமா வேண்டாம் இனி அரசியல்தான் என்ற முடிவுக்கு அவர் வந்தார். கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.

ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்த நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா தரப்பில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தந்திருப்பவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி மட்டும்தான். கட்சியின் அரசியல் மாநாட்டில் ஒரு பார்வையாளராக நடிகர் ஸ்ரீமன் மட்டுமே கலந்துக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர்கள் வடிவேலு கருணாஸ் சரத்குமார் சீமான் போன்றவர்கள் விஜயை கடுமையாக எதிர்க்கின்றனர். ரஜினி தரப்பிலும் விஜய்க்கு ஆதரவு இல்லை. கமலும் பெரிய அளவில் விஜய் குறித்து பேசுவதில்லை. முன்னணி நடிகர்கள் பலரும் விஜயுடன் நடித்த நிலையில் அவருக்கான ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தாமல் உள்ள நிலையில், விஜய் மக்களின், ரசிகர்களின் ஆதரவுடன் மட்டுமே அரசியல் களத்தில் நிற்கிறார்.

நடிகர்கள் கமல்ஹாசன் சரத்குமார் சீமான் கருணாஸ் போன்றவர்கள் அரசியலில் பெரிய அளவில் சாதிக்கலாம், சிஎம் ஆகலாம் என்ற கனவுடன் வந்தவர்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. மாறாக படுதோல்வி அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். விஜயின் அரசியல் துணிச்சலை பாராட்டி ரஜினியை பலரும் ஏற்கனவே கலாய்த்து வருகின்றனர். அதனால் நம்மால் சாதிக்க முடியாததை, நடிகர் விஜய் சாதித்து விடுவாரோ, அரசியலில் பெரிய வெற்றியை கண்டு விடுவாரோ என்ற பொறாமை, காழ்ப்புணர்ச்சியே விஜயை சில நடிகர்கள் கடுமையாக எதிர்க்க, விமர்சிக்க முக்கிய காரணமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்