சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் ரக்சிதா மகாலட்சுமி. இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரு சீரியலில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டனர்.
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இன்னும் இருவரும் சேராமல் ஆண்டுக்கணக்கில் பிரிந்து வாழ்கின்றனர். ரக்சிதாவின் கணவர் தினேஷ், தொடர்ந்து ரக்சிதாவுடன் வாழ விரும்புவதாக பொதுவெளிகளில் கூறி வருகிறார். தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வேன் என்றும் கூறி வருகிறார்.
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரக்சிதா, குறிப்பிட்ட நாட்களுக்கு பின் வெளியேறினார். அவரால் டைட்டில் வின்னர் வெல்ல முடியவில்லை. இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள தினேஷ், என் மனைவியின் ஆசையை நிறைவேற்றி, இந்தமுறை இந்த டைட்டில் வின்னர் பட்டத்தை வென்று அவருக்கு பரிசளிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் ரக்சிதாவை பொருத்தவரை, இனி தினேஷ் உடன் சேர்ந்து வாழ மாட்டேன். அவரால் பட்ட மனவேதனை போதும் என்ற நிலையில் தன் பதிவுகளை செய்து வருகிறார். சமீபத்தில் ரக்சிதாவின் கையில் இருந்த தினேஷ் பெயரை அழித்து, டாட்டூஸ் வரைந்து அதை பதிவிட்டிருந்தார் ரக்சிதா மகாலட்சுமி. மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் என்னை பற்றி தேவையின்றி பேச வேண்டாம் என்றும் அவர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் தினேஷூக்கும், விசித்ராவுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துக் கொள்கின்றனர். இருவரும் காரசாரமாக பேசிக்கொள்கின்றனர். இதை பார்த்த ரக்சிதா, விசித்ராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக த பைட்டர் என்ற கேப்சனுடன் விசித்ரா புகைப்படத்தை சிங்கப்பெண்ணே என்ற பாடலுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் தினேஷ் இருக்கிறார். அவருடன் சக போட்டியாளரான விசித்ரா வாக்குவாதம், சண்டை செய்கிறார். அதில் தன் கணவருக்கு ஆதரவு தராமல், விசித்ராவுக்கு தன் ஆதரவை தெரிவித்தது மூலம், தினேஷ் மீது தனக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அவருடன் சேர்ந்து வாழ விருப்பமும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ரக்சிதா என பலரும் கூறி வருகின்றனர்.





