- Advertisement -
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் கருப்பு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மன் நடிகை நயன்தாராவுக்கும் கருப்பு படம் நடிகர் சூர்யாவுக்கும் பெரிய கம்பேக் தந்த படங்களாக இருந்தன. ஆனால் இப்படி சூப்பர் ஹிட் படங்களை தந்தும் ஆர்ஜே பாலாஜிக்கு படம் இயக்க வாய்ப்பு இல்லை. பல ஹீரோக்களுக்கு அவர் கதை சொல்லியும் அவரது இயக்கத்தில் நடிக்க யாருமே முன்வரவில்லை. படப்பிடிப்பு தளத்தில் ஓவராக பேசுவது, குறிப்பாக படத்தின் தன்னையே ஹீரோவாக முன்னிலைப்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.





