- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரது எச்சரிக்கையை மீறி அதை செய்தேன், நான் கேட்ட உதவியை அவர் செய்யவில்லை - கமல்...

அவரது எச்சரிக்கையை மீறி அதை செய்தேன், நான் கேட்ட உதவியை அவர் செய்யவில்லை – கமல் மீது புகார் கூறிய நடிகை அபிராமி!

- Advertisement -

தமிழில் வானவில் என்ற படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமானவர் அபிராமி. பிறகு பிரபுவுடன் சார்லி சாப்ளின் மிடில் கிளாஸ் மாதவன் கமலுடன் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன அவர் இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

மாதவன் நடித்த மாறா ரஜினி நடித்த வேட்டையன் படங்களில் நடித்துள்ள அபிராமி இப்போது ரஜினி நடிக்கும் கூலி விஜய் நடிக்கும் ஜனநாயகன் கமல் நடித்துள்ள தக்லைப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வேட்டையன் படத்தில் வில்லனுக்கு ஆதரவு தரும் கேரக்டரில் அபிராமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அபிராமி நடித்த படங்களில் கமலுடன் அவர் நடித்த விருமாண்டி பெரிய அளவில் பேசப்பட்டது. அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமி வாழ்ந்திருந்தார். விருமாண்டி 2ம் பாகம் எடுத்தால் நான் அதில் நடிக்க முடியாது. ஏனெனில் அந்த கதைப்படி அன்னலட்சுமி கேரக்டரில் நடித்த நான் இறந்து விடுவேன். ஆனால் கமல் சார் அழைத்தால், கண்டிப்பாக விருமாண்டி 2 படத்தில் நடிப்பேன் என்று அபிராமி கூறியிருந்தார்.

இந்நிலையில் விருமாண்டி படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை அபிராமி கூறியதாவது, விருமாண்டி படத்தில் நான் நடித்து வந்த சமயத்தில் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிக்க விரும்பினேன். அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் வூஸ்டர் காலேஜில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனால் இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதற்காக பிரபல கதாசிரியர் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு ஒரு சுபாரிசு கடிதம் எழுதி தந்தார். அதே நேரத்தில் நடிகர் கமலுடன் விருமாண்டி படப்பிடிப்பில் நான் நடித்து வந்தேன். அந்த சமயத்தில் இதுபற்றி கமலிடம் கூறி நீங்களும் ஒரு சிபாரிசு கடிதம் கொடுங்கள் என்று கேட்டேன்.

ஆனால் உனக்கு சிபாரிசு கடிதம் தர முடியாது என்று கமல் மறுத்துவிட்டார். சினிமாவை விட்டு நீ போகக்கூடாது. உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அவர் அதற்கு காரணம் சொன்னார். ஆனாலும் விருமாண்டி படம் முடிந்த பின்பு எனக்கு அந்த காலேஜில் இருந்து அட்மிஷன் கிடைத்தது. அதனால் நான் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்று விட்டேன். இந்த படிப்பு படிக்க வேண்டும் என்பது ஏதோ ஒரு நாளில் நான் எடுத்த முடிவு அல்ல. என்னுடைய பலநாள் கனவு அது என்று நடிகை அபிராமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்