தக் லைப் திரைப்படம் திரைக்கு வர இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மணிரத்னம் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், கமல்ஹாசன் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றன.
படத்தில் கமல்ஹாசனுக்கு ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் கேங்ஸ்டர் ஆக வருகிறார். கமலுக்கு மனைவியாக அபிராமி நடித்துள்ளார். அதேபோல் இருவருக்கும் வளர்ப்பு மகனாக வருகிறார் சிலம்பரசன். அவருக்கு அமரன் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசன் அமர்ஹே என்னும் கதையை எழுதி வைத்திருந்தார். அது மணிரத்னத்துக்கு மிகவும் பிடித்துப் போக, கதையை அப்படியே எடுத்துக் கொண்டு தனது ஸ்டைலுக்கு அவர் மாற்றி இருக்கிறார். படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் மோதுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அது மட்டுமல்லாமல் சிம்பு இங்கு நான்தான் இனிமேல் ரங்கராய சக்திவேல் என்று கூறும் வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமல்ல திரிஷாவும் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவே இந்த திரைப்படத்தில் வந்தார். இதனால் ட்ரெய்லரிலேயே பல ட்விஸ்டுகள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கருதினர்.
அதுமட்டுமல்லாமல் கமலுக்கும் அபிராமிக்கும் இடையேயான முத்த காட்சி ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த விருமாண்டியிலும் முத்த காட்சி இருந்தது. இது பற்றி பலரும் இணையத்தில் பேச ஆரம்பித்தனர். தற்போது பேட்டி ஒன்றில் அபிராமி இதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
அந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்தால் தான் அதற்கான முக்கியத்துவம் தெரியும். நீங்கள் நினைப்பது போன்ற காட்சி இல்லை அது. முன்னோட்டத்தில் அந்த காட்சி காட்டப்பட்டதால் வைரல் ஆகிவிட்டது. ஏன் மற்ற நடிகர்கள் முத்தக்காட்சியில் நடிப்பதில்லையா? இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று அபிராமி கூறி இருக்கிறார்.





