- Advertisement -
Homeபொழுதுபோக்கு27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்கும் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல், ஏஐ தொழில்நுட்பம்...

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்கும் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல், ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்திய சாதனை – இன்று மாலை மனசிலாயோ பாடல் வெளியீடு

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே ஜேசுதாஸ், டி எம் சௌந்தரராஜன், பி பி எஸ் சீனிவாஸ் போல கடந்த 1980, 90களில் மிகப் பிரபலமான முன்னணி பாடகராக இருந்தவர் மலேசியா வாசுதேவன். இவர் முதன் முறையாக டைரக்டர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் தான் பாட ஆரம்பித்தார். இந்த படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.

இந்த படத்தில் பாடவேண்டிய எஸ் பி பாலசுப்பிரமணியம் வேறு படங்களில் கமிட் ஆகி பாட முடியாததால், 16 வயதினிலே படத்தில் அனைத்து பாடல்களையும் பாடும் வாய்ப்பு மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே மிக அற்புதமான பாடகர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. மலேசியா வாசுதேவன் தொடர்ந்து பல படங்களில் பாடி முன்னணி பாடகராக உருவானார்.

- Advertisement -

முதல் மரியாதை படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பூங்காற்று திரும்புமா போன்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இப்போதும் ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மலேசியா வாசுதேவன் ரஜினிகாந்துக்கு நிறைய படங்களில் பாடியிருக்கிறார். குறிப்பாக மாவீரன் மனிதன் படிக்காதவன் மிஸ்டர் பாரத் ஊர்க்காவலன் மாப்பிள்ளை ரங்கா உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு பல பாடல்களை மலேசியா தேவன் பாடி அது மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

குறிப்பாக வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னால, மனிதன் மனிதன் எவன்தான் மனிதன், ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக, என்னம்மா கண்ணு சவுக்கியமா போன்ற பாடல்கள் பெரிய அளவில் ரஜினிபிரபலமான பாடல்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மலேசியா வாசுதேவன் மறைந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி பாடல் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்க உள்ளது.

- Advertisement -

தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மனசிலாயோ என்ற முதல் பாடல் இன்று மாலை வெளியாகிறது. இந்த மனசிலாயோபாடலை மலேசியா வாசுதேவன் குரலில் தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர்.

சமீப காலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரலில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி வருகின்றனர். மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரணி ஆகியோர் வரிசையில் இப்போது 27 ஆண்டுகளுக்கு பின் மலேசியா வாசுதேவனின் குரல் ரஜினியின் படப்பாடலில் ரஜினியின் குரலாக ஒலிக்க இருக்கிறது. மலேசியா வாசுதேவன் பல படங்களில் நடித்த நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்