- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நளினி - ராமராஜன் விவாகரத்துக்கு நான்தான் காரணமா? - 26 ஆண்டுகளுக்கு பிறகு பதில்...

நடிகை நளினி – ராமராஜன் விவாகரத்துக்கு நான்தான் காரணமா? – 26 ஆண்டுகளுக்கு பிறகு பதில் சொன்ன விக்ரம் பட நடிகை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் ராமராஜன். பிறகுதான் அவர் சினிமாவில் நடித்து ஹீரோவாக ரசிகர்களிடம் அறிமுகமானார். உதவி இயக்குனராக இருந்த போதே நடிகை நளினி நடித்த பல படங்களில் பணிபுரிந்தவர் ராமராஜன். அப்போது இருவருக்கும் நல்ல பழக்கமும் நட்பும் ஏற்பட்டது.

அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்த நடிகை நளினியை நடிகர் ராமராஜன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 19837ம் ஆண்டில் அவர்கள் திருமணம் நடந்தது. ஆனால் 2000ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இன்று வரை இருவருமே தனித்து வாழ்ந்து வருகின்றனர். இருவருமே 2வது திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நளினி ராமராஜன் பிரிந்த போது நடிகர் ராமராஜனுடன் நடித்த நடிகை அபிதா தான் அவர்களது பிரிவுக்கு காரணம் என்று தகவல் பரவியது. இவர் சேது என்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர். மேலும் சன் டிவியில் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.

கடந்த 2001ம் ஆண்டில் ராமராஜன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்து வெளிவந்த சீறிவரும் காளை என்ற படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் படப்பிடிப்பின் போது ராமராஜன் அபிதா இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே நளினியை அவர் பிரிந்தார் என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

இன்னும் நடிகை அபிதா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இப்போது ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தில் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை அபிதாவிடம் நளினி ராமராஜன் பிரிவு குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன். ராமராஜன் என்னை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் வதந்தியை கிளப்பி விட்டார்கள்.

அது உண்மை என்றால் அப்போதே நடந்து இருக்க வேண்டும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. காரணம் அது பொய்யான தகவல் தான். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக என் குடும்பத்தினர் இருந்தார்கள். அதனால்தான் அந்த பாதிப்பில் இருந்து நான் விடுபட்டு மீண்டு வந்தேன் என்று நடிகை அபிதா கூறியிருக்கிறார். அப்போது இந்த வதந்தி குறித்து எதுவும் பேசாத நடிகை அபிதா, 26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்