நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பெரிய அளவில் ரஜினிக்கு கம்பேக் கொடுத்தது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி மிருணாள் மேனன் சுனில் மலையாள நடிகர் விநாயகன் டிவிடி கணேஷ் யோகிபாபு சரவணன் மாரிமுத்து உள்பட மோகன்லால் ஜாக்கி ஷெராப் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
குறிப்பாக இந்த படத்தில் காவலய்யா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமன்னா பெரிய அளவில் ஹைப் கொடுத்திருந்தார். ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி காரணமாக இயக்குனர் ஹீரோ மியூசிக் டைரக்டர் என நெல்சன் ரஜினி அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் லக்ஸ்சரி கார்களை பரிசாக வழங்கினார்.
ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படமாக விரைவில் உருவாகி வெளியாகும் என அப்போதே சன்பிக்சர்ஸ் அறிவித்தது. அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் உருவாகி போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி எஸ்ஜே சூர்யா போன்றவர்களும் நடித்துள்ளனர்.
இதற்கிடையே ஜெயிலர் 2 படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து ரஜினிகாந்த் தர்மன் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். ஆனால் குறித்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. ஆனால் இப்போது ஜெயிலர் 2 படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகிற நவம்பர் 5ம் தேதி ரிலீஸ் என்று தகவல் கசிந்துள்ளது.
இன்னும் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் முடிவடையவில்லை. மேலும் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்பட வேண்டும். படத்துக்கு பிரமோசன் செய்ய வேண்டியும் இருப்பதால் வருகிற நவம்பர் 5ம் தேதி ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்யலாம். நவம்பர் 8 தீபாவளி பண்டிகை என்பதால் வசூலும் அதிகரிக்கும். இந்த முறை தலைவர் தீபாவளி கொண்டாடும் விதமாக ஜெயிலர் 2 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.





