- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த தொழில் செய்தால் என்ன தவறு? சினிமாவில் நடிக்க முடியாவிட்டால் அப்படி கூட நான் பிழைத்துக்...

அந்த தொழில் செய்தால் என்ன தவறு? சினிமாவில் நடிக்க முடியாவிட்டால் அப்படி கூட நான் பிழைத்துக் கொள்வேன் – நடிகை ஐஸ்வர்யா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை லட்சுமி. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் லட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மாநகர காவல் ருத்ரா உன்னைப் போல் ஒருவன் இன்று நீ நாளை நான் உள்ளிட்ட பல படங்களில் லட்சுமி நடித்திருக்கிறார்.

நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ராசுக்குட்டி உள்ளே வெளியே வேல் ஆறு சுயம்வரம் என பல படங்களில் நடித்தவர். குறிப்பாக சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கேரக்டரில் அவரது அரசியல்வாதி நடிப்பு பெரிய அளவில் கவனமும் வரவேற்பும் பெற்றது.

- Advertisement -

ராசுக்குட்டி படத்தில் படிக்காத மாப்பிள்ளை நாயகன் கே பாக்யராஜை வேண்டாம் என்று முதலில் மறுத்துவிட்டு பிறகு ஹீரோவை வலிய வலிய சென்று பிடிவாதமாக காதலிக்கும் ஒரு கேரக்டரில் ஐஸ்வர்யா நடிப்பு அழுத்தமாக இருந்தது. அதே போல் உள்ளே வெளியே படத்திலும் பார்த்திபனும் இணைந்து அவர் நடித்திருந்தார்.

நடிப்பு ஆளுமை மிக்க சீனியர் நடிகை லட்சுமியின் மகளாக இருந்தாலும் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வெற்றி பெற முடியவில்லை. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடி சேர முடியாமல் 2ம் நிலை 3ம் நிலை என பின்வரிசை ஹீரோக்களுக்கு தான் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா கூறியதாவது, நான் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த நேரத்தில் என்னுடைய தேவைகளுக்காக சோப்பு விற்பனை செய்தேன். அதுகுறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இதில் என்ன தவறு இருக்கிறது? கேக் விற்பனை செய்யலாம். மளிகை கடை வைக்கலாம். இட்லி கடை கூட வைக்கலாம்.

வேறு எதையாவது விற்பனை செய்வதற்கு பதிலாக சோப்பை விற்பனை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. மரியாதையாக எந்த தொழிலை செய்தாலும் அது மதிக்கப்பட வேண்டும். எனக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனால் கூட நான் இட்லி கடை வைத்து பிழைத்துக் கொள்வேன். எனக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது என்று நடிகை ஐஸ்வர்யா அந்த நேர்காணலில் யதார்த்தமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்