- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்தில் நடிக்க மறுத்த அசின்.. ஜோதிகா தான் காரணம்..

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த அசின்.. ஜோதிகா தான் காரணம்..

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அசின். விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களோடு கைகோர்த்து மிகப்பெரிய ஹிட் படங்களை அவர் கொடுத்துள்ளார். எனினும் அவருக்கு ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயம் அடைய செய்த படம் என்றால் அது கஜினி தான்.

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படம் மெகா ஹிட் ஆனது என்றே கூறலாம். கேரளாவை சேர்ந்த அசின் தமிழ் சினிமாவில் அதன் பிறகு தான் கொடிகட்டி பறந்தார் என்று கூற வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்த அசின் அதன் பிறகு திரையுலகில் எட்டிப் பார்க்கவே இல்லை.

- Advertisement -

தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் அசின் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்து சிறப்பாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா ஒரு படத்தில் கமிட்டாகி அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்ற காரணத்தினால் அவர் அந்த படத்திலிருந்து விலகிய ஒரு சம்பவம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷு (பூமிகா நடித்த ரோல்) கதாபாத்திரத்திற்கு அசின் தான் முதலில் கமிட்டாகி உள்ளார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு தனக்கு கதையில் அதிகப்படியான முக்கியத்துவம் வேண்டும் அதோடு கூடுதலாக ஒரு பாடல் காட்சியும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் கதையின் இயக்குனர் அப்படி எல்லாம் கதையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டாராம்.

- Advertisement -

அதன் காரணமாக அசின் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த படத்தின் இயக்குனர் பல்வேறு நடிகைகளை தேர்வு செய்தும் யாரும் ஒத்து வராத நிலையில் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்துள்ளார். அந்த சமயத்தில் தான் பூமிகாவை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு.

அசின் வேண்டாம் என்று சொன்ன அந்த ஐஷு ரோல் தான் கதையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ரோல். ஆனால் அசின் அதன் முக்கியத்துவத்தை உணராமல் அதில் இருந்து அப்போது விலகி உள்ளார். அதே போல தமிழ் திரை உலகில் சூர்யா படம் மூலமாக உச்ச அந்தஸ்தை பெற்ற அசின் அதே சூர்யா படத்தில் நடிக்க மறுத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

- Advertisement -

சற்று முன்